"சந்திரயான் 3யின் மூளை" வீரமுத்துவேல்! திட்ட இயக்குநரானது எப்படி? தலையெழுத்தை மாற்றிய "அந்த பேப்பர்"
சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த தமிழர் வீரமுத்து வேல் சந்திரயான் 3 திட்ட இயக்குநராக நியமிக்க காரணமாக இருந்த ஆராய்ச்சி பேப்பர் எது தெரியுமா?
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் 1 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் தோல்விக்கு பிறகு சந்திரயான் 2வில் சில தொழில்நுட்பங்களை மேம்படுத்தி கடந்த 2019இல் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அதில் ரோவர் கருவி கீழே தரையிறங்கும் போது மோதி வெடித்து சிதறியது.

இதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. ஆனால் நிலவு வரை இந்த விண்கலம் போனது பாதி வெற்றி என சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து வெறும் 4 ஆண்டுகளில் மீண்டும் சந்திரயான் 3 எனும் விண்கலனை இந்தியா இன்று ஏவுகிறது. இது வெற்றி அடைந்தால் நிலவில் விண்கலம் அனுப்பிய ரஷ்யா, அமரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியா 4ஆவது நாடாகும்.
இந்த நிலையில் இந்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தமிழர். இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை தெற்கு ரயில்வேயில் டெக்னிஷியனாக பணிபுரிந்து வந்தார். வீரமுத்துவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில்தான் படித்தார். இதைத் தொடர்ந்து மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்த அவர் விண்வெளி மீது இருந்த ஆர்வம் காணமாக தாம்பரத்தில் என்ஜினியரிங் முடித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் உயர்கல்வி படித்தார். பின்னர் ஏரோஸ்பேஸ் துறையில் சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். தனது கடின உழைப்பால் வீரமுத்துவேலுக்கு 1989 இல் இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வந்த போதிலும் இஸ்ரோ வேலையையே தேர்வு செய்தார்.
2016 இல் விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முறை குறித்து ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார். அவரது ஆய்வு கட்டுரை குறித்து பெங்களூரில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த ஆய்வு கட்டுரையில் இடம் பெற்ற தொழில்நுட்பம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது.
இவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதுவே வீரமுத்துவேலை சந்திரயான் 3 திட்ட இயக்குநராக்கியது. இவர் சுமார் 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications