"அந்நியோன்யம்".. கிட்ட கிட்ட போயி புலம்பினாராம்.. லாட்ஜூக்குள் இளைஞர் அட்டகாசம்.. போலீஸே மிரண்டிடுச்சே
சென்னை: விசித்திரமான சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது.. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? என்ற ரேஞ்சில் மோசடி இளைஞர் ஒருவர் போலீசில் சிக்கி உள்ளார்.
சென்னை தரமணியை அடுத்துள்ள திருவேங்கடம் நகரில், வெங்கட் சாய் என்ற லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த லாட்ஜூக்கு 4 நாட்களுக்கு முன்பு ஒரு இளைஞர் சென்றிருக்கிறார்.
அந்த லாட்ஜையே நோட்டம் போட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞர், பிறகு, அங்கிருந்த முதல் மாடிக்கு சென்றார்.. ரூம் எடுத்து தங்கியிருந்த நபர்கள் எல்லாம், யார் என்று கவனித்தார்,.

மேன்ஷன்ஸ்
அதாவது, இதை லாட்ஜ் என்பதைவிட மேன்ஷன் என்றே சொல்லலாம்.. மாதக்கணக்கில் இங்கு தங்கியிருப்பவர்களும் உண்டு.. வேறு எங்காவது அவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டால், அங்கிருந்து மேன்ஷன் மாறிப்போவதும் உண்டு அல்லது சொந்த ஊருக்கு சென்றுவிடுவதும் உண்டு... இப்படி இந்த மேன்ஷன் வரலாறை அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்து கொண்டிருப்பதுடன், நீண்ட காலமாகவே இங்கு தங்கியிருப்பவர்கள் யார் யார்? அவர்கள் எந்தெந்த ஊரை சேர்ந்தவர்கள், எங்கே வேலை பார்ப்பவர்கள்? என இப்படி எல்லா விவரங்களையும் அந்த இளைஞர் திரட்டி லிஸ்ட் எடுத்து வைத்துள்ளார்.

ஹாஸ்பிடல்
இந்த லிஸ்ட்டை வைத்துதான், அவர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், மேன்ஷனில் உள்ளவர்களுக்கு இந்த இளைஞர் யார் என்றே தெரியாது.. சம்பவத்தன்று மேன்ஷனுக்குள் நுழைந்த இளைஞர், அங்கு முதல் மாடியில் ரூமில் எடுத்து தங்கியிருந்தவரிடம் நைசாக பேச்சு தந்தார்.. கீழ் தளத்தில் ரூம் எடுத்து வந்து தங்கியிருப்பதாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்... பிறகு, நெருக்கமாக அவரிடம் பேச்சை வளர்த்தார்..

ATM லாக்
ஒருகட்டத்தில், "என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அவசரமாக மருத்துவ செலவுக்கு ரூ.5000 பணம் அனுப்ப வேண்டும்.. என் கையில் திடீர்னு பணம் இல்லை.. இந்தநேரம் பார்த்து, என் கூகுள்-பே ஆப் லாக் ஆகி விட்டது.. நீங்கள் கூகுள்-பே வில் பணம் அனுப்பினால் நான் ATM-ல் பணத்தை எடுத்து தருகிறேன் என்று பேசியுள்ளார்.. அப்பாவி போல பேசவும், பரிதாபப்பட்டு, அந்த நபர், வங்கி கணக்கில் ரூபாய் 5,000 அனுப்பியுள்ளனர்... முதல் மாடியில் 5 ஆயிரம் வாங்கிகொண்டு, அப்படியே கீழ்த்தளத்துக்கு வந்துள்ளார்..

அன்னியோன்யம்
அங்கே ரூமில் தங்கியிருந்தவரிடம், "நான் முதல்மாடியில் புதுசா வந்திருக்கேன்.. ரூம் எடுத்து தங்கியிருக்கேன்.. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை" என்று அதே கதையை எடுத்தார்.. அங்கேயும் 5,000 ரூபாய் கூகுள்-பே மூலம் வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்.. அத்துடன் விடவில்லை.. பணம் தந்து உதவிய அந்த நபர்களுக்கு, கொஞச நேரத்திற்கெல்லாம் போனை போட்டார்.. "நான் இப்பதான் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தேன்.. என் அம்மாவுக்கு உடனே ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர்கள் சொல்கிறார்கள்.. 40,000 ரூபாய் கட்டணுமாம்.. நான் ATM வாசலில்தான் நிற்கிறேன். ஏற்கனவே எனக்கு அனுப்பிய அதே கூகுள்-பே விற்கு ரூபாய் 40,000 அனுப்பிடுங்க.. பணத்தை உடனே எடுத்துட்டு மேன்ஷன் வந்து தந்துடறேன்" என்று சொல்லி உள்ளார்..

ரிசப்ஷன்
ஆபரேஷன் என்றதும், மேன்ஷனில் உள்ளவர்களும் பதட்டமாகி விட்டார்கள்.. அதனால் அங்கு தங்கியுள்ள 4 பேரும் சேர்ந்து 40,000 பணத்தை அந்த இளைஞருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பணத்தை எடுத்து கொண்டு, உடனே வந்துவிடுவதாக சொன்ன இளைஞரை காணவில்லை.. நீண்ட நேரம் அவர் வராததால், 4 பேருக்கும் டவுட் வந்துள்ளது.. அதனால், அவரை பற்றி ரிசப்ஷனில் விசாரித்தபோது, அப்படி ஒரு இளைஞர், மேன்ஷனில் தங்கவேயில்லை என்பது உறுதியானது.. அப்போதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை 4 பேரும் உணர்ந்துள்ளனர்.. அதற்கு பிறகு, மேன்ஷனில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர்..

லாட்ஜ்ஜில் கைவரிசை
இளைஞரின் உருவம் பதிவாகி இருந்தது.. அந்த போட்டோக்களை, பிரிண்ட் அவுட் எடுத்து, மற்ற மேன்ஷன்களில் தங்கி உள்ள நண்பர்களுக்கு 4 பேரும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அட்வைஸ் தந்தனர்.. இறுதியாக, அந்த சிசிடிவி காட்சியுடன், தரமணி போலீசில் புகாரும் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசாரும் இளைஞரை தேடிவந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், 2 நாட்களுக்கு முன்பு, இதே தரமணியில், இதே போல ஒரு லாட்ஜூக்கு சென்றுள்ளார் அதே இளைஞர்.. வழக்கம்போல் அம்மா ஆஸ்பத்திரியில் இருப்பதாக சொல்லி பணம் பறிக்கவும் முயன்றுள்ளார். ஆனால் அந்த லாட்ஜில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டனர்..

மேன்ஷன்
இளைஞரை சுற்றிவளைத்து பிடித்து தரமணி போலீசில் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.. தானாகவே வந்து சிக்கிய இளைஞரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. அந்த இளைஞருக்கு 22 வயதாகிறதாம்.. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.. அவர் பெயர் சச்சின்குமார் என்பது தெரியவந்தது. பிறகு அவரது கூகுள்-பே வங்கி கணக்கை சோதனை செய்தபோது, இப்படி பல பேரிடம் பொய்யாக பேசி மோசடி செய்து பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது... அதுமட்டுமல்ல, இந்த சம்பவம் நடப்பதற்கு 2 நாள் முன்புதான், வேறு தரமணியில் வேறு ஒரு மேன்ஷனிலும் பணத்தை ஆட்டைய போட்டுள்ளார்.. தரமணி போன்று, ஒவ்வொரு ஏரியாவிலும் சில நாள் தங்கி, அங்கு "வேலையை" முடித்துக் கொண்டு, அடுத்த ஏரியாவுக்கு போவாராம்.. இப்போது ஜெயிலில் உள்ளார் சச்சின்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications