விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?
சென்னை: "எதிரிக்கு எதிரி நண்பன்" - இது சாணக்கிய நீதியோ இல்லையோ, தமிழக அரசியலில் எப்போதும் 'ஒர்க்-அவுட்' ஆகும் ஃபார்முலா. இப்போது சென்னை பெரம்பூர் தொகுதி அந்த ஃபார்முலாவின் பரிசோதனைக் களமாக மாறியிருக்கிறது. அங்கே அதிமுக நிற்காமல் பாமக நிற்பது விஜய்க்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.. ஏனென்றால் அங்கே திமுக சார்பாக மீண்டும் ஆர்.டி சேகர் நிற்கிறார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) தனது முதல் அடியை பெரம்பூரில் எடுத்து வைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. "தளபதி வர்றார்... தடம் பதிக்கப் போறார்" என ஒரு பக்கம் தம்பிகள் குதூகலிக்க, இன்னொரு பக்கம் 'சைலன்ட்' ஆக ஒரு ஸ்கெட்ச் போடப்பட்டிருக்கிறது. அதுதான் அதிமுக-பாமக கூட்டணி டீல்.

அதிமுக போட்ட 'சரண்டர்' கணக்கு!
பெரம்பூர் என்பது பாரம்பரியமாக திராவிடக் கட்சிகளின் கோட்டை. இங்கே அதிமுக தனது சின்னமான இரட்டையிலையை களமிறக்காமல், கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கியிருப்பது பல புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் சிம்பிள்: விஜய்யின் வெற்றியைத் தடுப்பது. அதிமுகவின் வாக்கு வங்கி விஜய்யின் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதே சமயம் ஒருவேளை விஜய் வெற்றி பெற்றால் அது அதிமுகவுக்குப் பெரிய பின்னடைவாகத் தெரியும் என்பதாலும், இந்தத் தொகுதியை பாமகவுக்கு 'கிஃப்ட்' கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது எடப்பாடியார் தரப்பு. "நாம தோத்தா அதிமுக தோத்ததா ஆகாது, ஆனா விஜய் ஜெயிச்சா அது நமக்கு ரிஸ்க்" என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்கள் சிந்தனை.
அதாவது திமுக அதிமுக அங்கே நேரடியாக மோதினால் வாக்குகள் பிரியும்.. இதை பயன்படுத்தி விஜய். வெற்றிபெற்றுவிடுவார். அதுவே பாமக நிறுத்தப்பட்டால் அதிமுகவினர் கிரவுண்டில் அப்படியே திமுக பக்கம் செல்வார்கள். பலர் திமுக பக்கம் வாக்களிப்பார்கள். இதனால் பாமக டம்மியாக இருக்கும். ஏனென்றால் பெரம்பூரில் பாமக களத்திலேயே இல்லை. இதனால் மொத்தமாக வாக்குகள் திமுக பக்கம் செல்லும். விஜய்க்கு சிக்கல் ஆகும்.
ஆர்.டி.சேகருக்கு அடித்த லக்கி பிரைஸ்!
இந்தச் சூழலில், களத்தில் இருக்கும் தற்போதைய திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் (RDS) முகம் இப்போது பிரகாசமாக இருக்கிறது. ஏன் தெரியுமா?
கேடர் கன்சோலிடேஷன்: பெரம்பூரில் பாமகவுக்குப் பெரிய செல்வாக்கு இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். அங்கே மாம்பழம் சின்னத்தில் பாமக நிற்கும்போது, தீவிரமான அதிமுக தொண்டர்களுக்குப் பெரிய உற்சாகம் இருக்காது.
ஆதரவு மடைமாற்றம்: விஜய்யின் 'புதிய அரசியல்' தங்களுக்குச் சரிவராது என நினைக்கும் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள், தங்கள் 'ஈகோ' காரணமாகப் பாமகவுக்கு வேலை செய்யாமல், இயல்பாகவே உள்ளூர் செல்வாக்குள்ள 'நம்ம ஆளு' ஆர்.டி.சேகர் பக்கமே சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
செயல்பாட்டுப் பலம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் வடசென்னை வளர்ச்சித் திட்டங்களுக்காக 4500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில் ஆர்.டி.சேகரின் பங்கு, கணேசபுரம் மேம்பாலம், கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு சீரமைப்பு எனப் பல பிளஸ் பாயிண்டுகள் அவர் கைவசம் உள்ளன.
சிக்ஸர் அடிப்பாரா RDS?
விஜய் என்ற 'மாஸ்' இமேஜுக்கு எதிராக, ஆர்.டி.சேகர் என்ற 'கிளாஸ்' அரசியல்வாதி மோதுகிறார். அதிமுக சின்னம் இல்லாததால் ஏற்படும் வாக்குச் சிதறல், நேரடியாக ஆர்.டி.சேகருக்கு வாக்குகளின் குவியலாக மாற வாய்ப்பிருக்கிறது.
மொத்தத்தில், விஜய்யை வீழ்த்த அதிமுக விரித்த வலை, ஆர்.டி.சேகரை மீண்டும் கோட்டைக்கு அனுப்பும் சிவப்பு கம்பளமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதே தற்போதைய பெரம்பூர் நிலவரம்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications