நீங்க உங்க போனை எப்படி பிடிப்பீங்க? இந்த 4ல் ஒன்றை சூஸ் பண்ணுங்க.. ஈஸியா உங்க கேரக்டரை சொல்லிடலாம்!
சென்னை: நீங்க உங்க போனை எப்படி பிடித்து இருக்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களுடைய கேரக்டரை எளிதாக சொல்லிவிட முடியும் பாஸ்.. எப்படின்னு வியப்பா இருக்கா.. இதை படிங்க!
இப்போதெல்லாம் பல்வேறு விதமான பர்சனலாட்டி டெஸ்ட் இணையம் முழுக்க பரவிக்கிடக்கிறது. நீங்கள் இயல்பாக செய்யும் விஷயங்களை வைத்த உங்கள் குணாதிசயத்தை கண்டுபிடிக்கும் வழிகள் உள்ளன.
உதாரணமாக நீங்கள் உறங்கும் விதத்தை வைத்தே உங்களிடம் கேரக்டர் எப்படி என்பதை சொல்லிவிட முடியும்.

போன் டெஸ்ட்
அந்த வகையில்தான் நீங்க உங்க போனை எப்படி பிடித்து இருக்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களுடைய கேரக்டரை கண்டுபிடிக்க முடியும். இந்த செய்தியில் இணைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை பாருங்கள். இதில் மொத்தம் போனை 4 வகையாக பிடிக்கும் முறைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் நீங்கள் எந்த வகையில் போனை பிடிப்பீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதை வைத்து உங்களின் கேரக்டரை எளிதாக சொல்லிவிட முடியும்.. என்ன டெஸ்டுக்கு ரெடியா?

முதல் வகை
நீங்கள் முதல் டைப் போல போனை பிடிக்கும் ஆள் என்றால்.. நீங்கள் கவலை இல்லாத ஆள். ஹாப்பியாக இருக்க கூடிய குணம் கொண்டவர். பெரிதாக எதை பற்றியும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். பிரச்சனைகள் வந்தால் அதை பற்றி கவலைப்பட மாட்டீர்கள். நலன் விஷயங்கள் மீதே அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். எப்போது டேக் இட் ஈஸி என்று இருப்பீர்கள்.

இரண்டாம் வகை
நீங்கள் இரண்டாவது டைப்பில் இருப்பது போல போனை பிடிக்கும் ஆள் என்றால், நீங்கள் பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ளும் ஆள். பெரிய பிரச்சனை வந்தாலும் அதற்கு உடனடியாக தீர்வு காண்பீர்கள். நீங்கள் எதையும் எதிர்க்கும் குணம் கொண்டவர் அல்ல. அனைத்துடன் ஒத்து போய், உங்களை நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற்றும் திறன் கொண்டவர். உங்களுக்கு பல விதமான திறமைகள் இயல்பாக இருக்கும்.

மூன்றாம் வகை
அதேபோல் நீங்கள் 3வது டைப்பை தேர்வு செய்து இருந்தால்.. நீங்கள் தன்மையான, அமைதியான குணம் கொண்டவர். அதிக கேர் எடுக்கும் பண்பு கொண்டவர். நல்ல புத்திசாலியாக இருக்கும் நபர் நீங்கள். சமயங்களில் உங்களின் நல்ல குணம் காரணமாக சிலரிடம் நீங்கள் ஏமாந்து இருப்பீர்கள். இனிமேல் அனைவரையும் கூர்ந்து கவனித்து, கவனமாக பழுகுங்கள். நீங்கள் டேட்டிங்கில் கில்லாடியாக இருப்பீர்கள்.

நான்காம் வகை
நீங்கள் 4வைத்து டைப் ஆள் என்றால், நீங்கள் தெளிவான எண்ணம் கொண்டனர். அதிக கற்பனை திறன் கொண்டவர். இதனால் மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். உங்களின் பேச்சால் பலர் உங்களை நோக்கி கவரப்படுவார்கள் என்று அர்த்தம். நீங்கள் பெயின்டிங், எழுதுவது, கலை துறைகளில் சிறந்து விளங்க கூடியவர். காதலில் கொஞ்சம் வெட்கப்படும் குணம் கொண்டவராக நீங்கள் இருப்பீர்கள். ஆனால் அதே சமயம் பழகிவிட்டால் ஜாலி டைப்பாக இருப்பீர்கள்!












Click it and Unblock the Notifications