Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமராங் ஆக மாறிய பாஜக அஸ்திரம்.. ஸ்டாலின் மூவ்களுக்கு ‘கேட்’? ஆஹா.. யார்கிட்ட.. கடைசில இப்படியா?

திமுக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினின் அரசியல் நகர்வுகளுக்கும் நெருக்கடி கொடுக்க பாஜக போட்ட திட்டம் பாஜகவையே பதம் பார்த்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேசிய அரசியல் தலைவர்கள் திரும்பிப் பார்க்கும் வகையில், 2024 தேர்தலுக்கான ப்ளூ பிரிண்டை கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார். தான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருப்பதாகவும் தெரிவித்தார். மு.க.ஸ்டாலினின் இந்த அரசியல் நகர்வுகளுக்கு வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் மூலம் பாஜக நெருக்கடி கொடுக்க முயன்ற நிலையில், அது 'பூமராங்' ஆகியுள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய டெல்லிக்கே பறந்தது தமிழ்நாடு காவல்துறை.

மேலும், இதுதொடர்பாக அறிக்கை விட்ட அண்ணாமலை, தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கருத்துகள் அவதூறு பரப்புவதாகவும், மோதலை தூண்டுவதாகவும் இருப்பதாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரவிய பொய்யான தகவல்

பரவிய பொய்யான தகவல்

பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டதாக சில வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவல்கள், வீடியோக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், தமிழ்நாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் விளக்கம் அளித்தது. இந்நிலையில், வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகி உள்ளிட்டோர் மீதும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து வெளியிட்டதாக அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் அட்டாக் முயற்சிகள் அவர்கள் மீதே பூமராங்காக திரும்பியுள்ளன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 முக்கிய அரசியல் தலைவர்கள்

முக்கிய அரசியல் தலைவர்கள்

கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்ட மேடையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்தனர். இந்த விழா மேடை, பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அறைகூவலாக அமைந்தது.

பாஜகவின் விமர்சனம்

பாஜகவின் விமர்சனம்

இதற்கிடையே தான், வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. பீகாரில் உள்ள பாஜகவினர், தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பீகார் சட்டப்பேரவையில் பேசிய பாஜக தலைவர் விஜய் குமார் சின்ஹா, தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார், இது பீகார் மக்களை அவமதிக்கும் செயல் என விமர்சித்தார்.

பொய்யைப் பரப்பும் பாஜக

பொய்யைப் பரப்பும் பாஜக

இதற்கிடையே, வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பரவும் தகவல்கள் பொய்யானவை என தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் விளக்கம் அளித்தது. இதையடுத்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சைலேந்திரபாபு விளக்கம் அளித்த வீடியோவை குறிப்பிட்டு, "பாஜகவிற்கும், உண்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் பொய்கள் மீண்டும் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டன. பொய், குழப்பம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை பரப்புவதே பாஜகவின் தொழில்." எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

நேரடியாக இறங்கிய ஸ்டாலின்

நேரடியாக இறங்கிய ஸ்டாலின்

மேலும், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற அவதூறு பிரசாரங்கள் தொடர்ந்து சிலரால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது என்றும் எந்த மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டும் தெளிவுபடுத்தினார் முதல்வர் ஸ்டாலின். மேலும், இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலையைக் காணப் பொறுக்காமல் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடும் சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

அமைச்சர் சொன்ன வார்த்தை

அமைச்சர் சொன்ன வார்த்தை

தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை, வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை. அந்த பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர்." என்று நேற்று குற்றம்சாட்டினார்.

சுத்து போட முயற்சி?

சுத்து போட முயற்சி?

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திட்டமிட்டு தாக்கப்படுவதாக பிரச்சனையைக் கிளப்பி திமுக அரசுக்கு சிக்கலையும், நெருக்கடியையும் ஏற்படுத்தலாம் என பாஜக முயன்றது. இந்தப் பிரச்சனை கிளம்பினால், வட மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் என திட்டமிடப்பட்டது. அதற்குத் தோதாக, பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற நேரத்தில் இதனை, பூதாகரமாக்கினால் பீகாரில் நிதிஷ் - தேஜஸ்வி கூட்டணி அரசுக்கும், தமிழ்நாட்டில் திமுக அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்த பாஜக முயற்சி மேற்கொண்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஒருங்கிணைவு தடுக்கப்படும்

ஒருங்கிணைவு தடுக்கப்படும்

நாடு முழுவதுமுள்ள பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என்ற முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் முயற்சிக்கும் இந்த வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையால் முட்டுக்கட்டை போடலாம் என பாஜக திட்டமிட்டிருக்கலாம் என்றும், ஆனால், இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு, பதற்றத்தைத் தணித்து, பாஜகவின் திட்டங்களைத் தவிடுபொடி ஆக்கிவிட்டது திமுக அரசு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். முதல்வர் ஸ்டாலினின் அரசியல் மூவ்களுக்கு செக் வைக்க நினைத்த பாஜகவுக்கே, சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

பாஜக பக்கம் திரும்பிய போலீஸ்

பாஜக பக்கம் திரும்பிய போலீஸ்

பீகார் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவை கைது செய்ய டெல்லிக்கு விரைந்தது தமிழ்நாடு காவல்துறை. ஹைதராபாத்தில் இரு நபர்களிடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த மோதலாக சித்தரித்து வதந்தி பரப்பியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி போலீசார், அவரை கைது செய்ய டெல்லி சென்றுள்ளனர்.மேலும் வதந்தி விவகாரத்தில் பீகார் பாஜக ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கும் சென்னை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

அடுத்தடுத்து அதிரடி

அடுத்தடுத்து அதிரடி

மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணாமலை இரு பிரிவினர்களிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுகவுக்கு நெருக்கடி தர பாஜக திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது அடுத்தடுத்து அதிரடி ஆக்‌ஷன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+