பேண்டமிக் அல்ல.. எண்டமிக்! 2001ல் தோன்றிய HMPV வைரஸ்.. மீண்டும் தலையெடுத்தது எப்படி? பின்னணி
சென்னை: இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த பாதிப்பு ஏற்பட்ட எல்லோரும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் புதிய வைரஸ் கிடையாது. 2001ம் ஆண்டில் இருந்தே இந்த வைரஸ் இருக்கிறது.
HMPV வைரஸ் என்பது human metapneumovirus என்பதை சுருக்கம் ஆகும்.. அதாவது மனித மெட்டாப்நிமோவைரஸ். இதுவும் கொரோனா போலவே.. மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். அதாவது இதுவும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவுகிறது.

இந்த வைரஸ் புதிய வைரஸ் கிடையாது. 2001ம் ஆண்டில் இருந்தே இந்த வைரஸ் இருக்கிறது. தற்போது இது மீண்டு வந்துள்ளது என்று சொல்ல முடியாது. இது எப்போதுமே மக்களுடன் மக்களாக இருந்துள்ளது. எண்டமிக் என்று சொல்வார்களே.. அதாவது மக்களுடன் மக்களாக பரவி பருவ காய்ச்சல் போல் மாறும் வைரஸ். இப்போது கொரோனா ஒரு எண்டமிக் வைரஸ்.
அது பெரிய மாற்றம் அடையாத பட்சத்தில் பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தாது. அதேபோல்தான் இந்த HMPV வைரஸ். இதுவும் எண்டமிக் ஆக உள்ளது. அவ்வப்போது சீசனுக்கு சீசன் இது வரும். பலரை தாக்கும். பின்னர் மறைந்துவிடும். பின்னர் மீண்டும் வரும். அப்படித்தான் இந்த முறை இந்தியா, சீனாவில் வந்துள்ளது.
HMPV வைரஸ் என்றால் என்ன?:
HMPV 2001 இல் கண்டுபிடிக்கப்பட்டது. HMPV ஆனது நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த குடும்பத்து வைரசுகள் பொதுவாக சுவாசம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். பொதுவான சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டு இருக்கும். மூச்சு விடுவதில் அதிக சிரமத்தை ஏற்படுத்தும். இது முதல் முத்தலாக் நியூசிலாந்தில் பதிவாகி.. 2003ல் எண்டமிக் வைரஸாக மாறியது.
இது அனைத்து வயதினரையும் பாதிக்கும். சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே இணை நோய் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
HMPV இன் அறிகுறிகள்:
HMPV அறிகுறிகள் பின்வருமாறு: இருமல், மூக்கில் சளி வருதல், மூக்கில் அடைப்பு, காய்ச்சல், தொண்டை புண், மூச்சுத்திணறல் அல்லது கடுமையான சந்தர்ப்பங்களில் ஆக்சிஜன் பிரச்சனை. சில சந்தர்ப்பங்களில், மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா அல்லது ஆஸ்துமா ஏற்படும்.
யாருக்கு ஆபத்து அதிகம்?:
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், குறிப்பாக கைக்குழந்தைகள், முதியவர்கள், குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாச நிலைமைகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
HMPV காரணமாக இப்போது தொற்று அதிகம் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். என்றாலும் கூட இது ஒரு புதிய வைரஸ் அல்லது உடனடி தொற்று அச்சுறுத்தல் அல்ல. பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான். இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக இளம் வயது.. அதாவது 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக HMPV வைரஸ் தாக்குகிறது. சீன அதிகாரிகளும், உலக சுகாதார மையமும் பயப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை.. இதை பார்த்து கொரோனா போல அச்சப்பட வேண்டாம். இது சாதாரண மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் HMPV என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications