உறுதியா? எடப்பாடி அப்போது கொடுத்த வாக்குறுதி.. அவருக்கே எதிராக திரும்பியது.. அப்பாவுவின் அதிரடி!
சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதி ஒன்றே அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் கவனம் பெற்றது. முன்னதாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதியது.
ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை என்ன?
ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இதனால் இன்று தமிழ்நாடு சட்டசபையில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் இதுவரை இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது.

இருக்கை மாற்றம்
இருக்கையை மாற்றாதது ஏன் என்று நேற்று சபாநாயகர் அப்பாவுவும் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதி ஒன்றுதான் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த மாதம் கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணை
சுமார் 20 நிமிடம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த பொதுக்குழு வழக்கில் அடுத்த விசாரணை அல்லது உத்தரவு வரும் வரை தற்போது நிலை நீடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கூடாது. இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்ததும் உடனே.. எடப்பாடியிடம் இது உறுதியா என்று கேட்டனர். அதாவது தேர்தல் நடத்த கூடாது என்று உறுதி அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு நீதிபதிகளிடம்.. கண்டிப்பாக தேர்தல் நடத்த மாட்டோம் என்று எடப்பாடி தரப்பு உறுதி அளித்தது.

நவம்பர்
இந்த வழக்கு தற்போது நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குறுதிதான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி உள்ளது. சட்டசபையில் யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பதை சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும். எனக்கு இருக்கை வசதியாக இல்லை. மாற்ற வேண்டும் என்று சொன்னால் மாற்றுவேன். ஆனால் மற்றவர்களை அந்த இருக்கையில் அமர வைக்க கூடாது என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதில் நானே முடிவு எடுக்க வேண்டும்.

இருக்கை
சட்டப்பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும். துணை எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி அதிகாரபூர்வமாக கிடையாது. அது கட்சிகளால் வழங்கப்படும் அடையாள பதவி. இரண்டு தரப்பும் இந்த பதவிக்காக வழங்கிய கடிதங்களை படித்தேன். ஓ பன்னீர்செல்வம் தரப்பு, வழக்கில் விசாரணை நடத்துகிறது. அதுவரை இதில் முடிவு எடுக்க கூடாது என்று கூறியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு முடிவு, எம்எல்ஏக்கள் ஆதரவை குறிப்பிட்டு உள்ளது. இருப்பினும் சட்டமன்ற விதிகளின் இந்த கோரிக்கைகள் செல்ல கூடியதா என்று ஆய்வு செய்து வருகிறேன். அதே சமயம் அதிமுகவில் எதையும் மாற்ற மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி உறுதி அளித்ததையும் இங்கே நினைவு கூற வேண்டும் என்று அப்பாவு கூறினார். அதாவது அதிமுகவில் இப்போது நிலவும் அதே நிலை தொடரும் என்று எடப்பாடி கொடுத்த வாக்குறுதியே அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி?












Click it and Unblock the Notifications