டிடிவிக்கு தெரியாமல் ஸ்டாலின் செய்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. செந்தில்பாலாஜியை ''தூக்கியது'' எப்படி?
திமுக தலைவர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை திமுகவிற்கு இழுத்ததன் மூலம், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை திமுகவிற்கு இழுத்ததன் மூலம், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறார்.
வி.செந்தில்பாலாஜி அமமுகவில் இருந்து பிரிந்து இன்று திமுகவில் இணைகிறார் என்று தகவல்கள் வருகிறது. முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக டிடிவி தினகரன் அணிக்கு தாவி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக இவர் பதவி வகித்து வந்தார். இன்று இவர் திமுகவில் இணைகிறார்.

ஸ்டாலின் ஆசை
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று ஆசையே இல்லை என்றுதான் கூறுகிறார்கள். அவரது ஆசை எல்லாம் இடைத்தேர்தலில் எல்லா இடங்களையும் வென்று, பின் ஆட்சி அமைப்பதே. அதனால்தான் இடையில் பலமுறை ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு வந்தும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தார். இதனால் திமுக தலைமை மீது பலருக்கு சந்தேகம் கூட வந்தது.

ஆட்சி அமைக்க முடியும்
இடைத்தேர்தலை சந்தித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே சரியானது என்றுதான் ஸ்டாலின் நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் டிடிவி தினகரன் வைத்து இருக்கும் தொண்டர்கள் பலத்திற்கு முன் அது அத்தனை சாத்தியம் கிடையாது. முக்கியமாக கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே வலுவில்லாமல் இருக்கும் திமுக அங்கு அதிமுக, அமமுகவை எதிர்த்து இடைத்தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பே கிடையாது.

ஆபரேஷன் செந்தில் பாலாஜி
இதற்காக ஸ்டாலின் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்தான் ''ஆபரேஷன் செந்தில் பாலாஜி'' என்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கும் டிடிவி தினகரனுக்கும் உறவு அத்தனை சுமுகமாக இல்லை என்பது அரசியல் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்தது செந்தில் எப்படியும் அதிமுகவிற்கு செல்வார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் ஸ்டாலின் இடையில் புகுந்து காய் நகர்த்தி இருக்கிறார்.

ஏற்கனவே பேசினார்கள்
செந்தில் பாலாஜிக்கு சரியான தலைமை இல்லாத அதிமுகவிற்கு செல்வதை விட திமுகவிற்கு செல்வதுதான் ''சேஃப் ஃசோன்'' என்று கூறி இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதற்காக கடந்த ஒரு மாதமாக கரூரிலும், சென்னையிலும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு தரப்பும் (திமுக, செந்தில் தரப்பு) பலமுறை போனில் பேசி இருக்கிறார்கள். சில சமயம் ஆ.ராசாவும், செந்தில் பாலாஜியும் கூட நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

தினகரன் எதிர்பார்க்கவில்லை
இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தினகரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவரது கவனம் எல்லாம் பாஜக மீதும், அதிமுக மீதுதான் இருந்தது. திமுக அத்தனை பெரிய டான் கிடையாது என்றுதான் தினகரன் இத்தனை நினைத்து இருந்தார். திமுக நடத்திய சர்ப்ரைஸ் தாக்குதல் மூலம், இனிதான் அரசியல் ஆட்டம் களைகட்ட போகிறது. டிடிவி தினகரன் உண்மையான அரசியல் என்னவென்று இப்போதுதான் உணர்ந்திருப்பார். இதற்கு அவர் எப்படி செயலாற்ற போகிறார் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

தேர்தலில் உதவும்
இன்னும் கூட சில தினகரன் ஆதரவாளர்கள் திமுகவிற்கு வரும் நாட்களில் மாற வாய்ப்பு இருக்கிறது. 20 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலில் நிற்க வைக்க திமுக ''உறுதியாக வெற்றிபெறும்'' வலுவான நபர்களை தேடிக்கொண்டு இருக்கிறது. ''உன்பேரு என்ன சங்கிலி? அப்ப நீதான் கங்குலி!'' என்று வடிவேல் காமெடி போல விளையாட்டுதனமாக ஆள் சேர்க்காமல், மிக முக்கியமான தலைகளை மட்டுமே திமுக தரப்பு தேடி தேடி சேர்த்து வருகிறது.

செந்தில் பாலாஜி தொகுதி
இந்த முக்கியமான நபர்கள் எல்லோரும் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள். கண்டிப்பாக திமுக சார்பாக செந்தில் பாலாஜி அவரின் பழைய தொகுதியான கரூர் தொகுதியிலேயே போட்டியிடுவார். இதன் காரணமாக இடைத்தேர்தலுக்கு பின் மொத்தமாக ஆட்சி மாறினாலோ, இப்போது இருக்கும் ஆட்சி கவிழ்ந்தாலோ ஆச்சர்யப்படுவதற்கில்லை.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications