விடிய விடிய போதை.. பார்ட்டி.. 5 பெண்களை காதலித்த ஹேமந்த்.. புழுவாய் துடித்து இறந்த சித்ரா.. ஷாக்!
சென்னை: சித்ரா மரணம் தொடர்பாக, ஹேமந்த் சிக்கியது எப்படி, என்பது குறித்தும், சித்ராவை ஹேமந்த் எப்படியெல்லாம் சித்ரவதை செய்துள்ளார் என்பது குறித்தும் போலீஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
கதிர் - முல்லை ஜோடி பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ் ஆன நிலையில், இவர்களது ஸ்டேஜ் டான்சும் மக்களை சுண்டி இழுத்தது.. இதுதான் ஹேமந்த்துக்கு எரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.
ஒருவேளை இவர்கள் 2 பேரும் டான்ஸ் ஆடும்போது, நெருக்கம் கூடிவிடுமோ என்பதுதான் ஹேமந்த்தின் முதல் சந்தேகப்புள்ளி.. இதுகுறித்து சித்ராவிடம் கேள்விகளாய் கேட்டு துளைத்தெடுத்துள்ளார்.

கதிர் - முல்லை
"அவருக்கு கல்யாணமாகிவிட்டது, இது டான்ஸ், வெறும் சீரியல் நடிப்பு", என்றெல்லாம் சித்ரா தந்த விளக்கம் எதுவும் ஹேமந்திடம் எடுபடவில்லையாம். இதற்கு பிறகுதான் அது போன்று நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என்று சித்ராவிடம் ஹேமந்த் கூறி சண்டை போட்டாராம். "கதிர் கல்யாணமானவர்.. அதனால் அவருடன் இனி தன்னால் டான்ஸ் ஆட முடியாது" என்று முல்லையின் வாயாலேயே பலரது முன்னிலையில் சொல்ல வைத்தாராம் ஹேமந்த்.

விரிசல்
இது கதிர் - சித்ரா இடையேயான நட்பில் விரிசலை உண்டுபண்ணவிட்டது. கதிர்-முல்லை ஏதோ பிரச்சனையாமே என்று சோஷியல் மீடியாவிலும் கேள்விகள் எழ தொடங்கியது.. இதன்பிறகு, இந்த பிரச்சனையால் சீரியல் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று சம்பந்தபட்ட குழுவினர், மறுபடியும் இவர்கள் இருவரையும் டிக்டாக் மூலம் சேர்ந்து நடிக்க வைத்தனர்.. தொடர்ந்து, கதிர் முல்லைக்கு இடையே பல நெருக்கமான சீன்களும் சீரியலில் இடம் பெற்றது.

கண்டிஷன்கள்
இந்த இடைப்பட்ட நேரத்தில் சித்ரா - ஹேமந்த்தின் நிச்சயதார்த்தம், ரிஜிஸ்தர் திருமணம் நடந்துவிடவும், ஹேமந்த் அதிக உரிமையை கையில் எடுத்துள்ளார்.. தினம் தினம் சித்ரவதை தொடர்ந்துள்ளது.. எந்த சீனில் எப்படி, யாருடன் நடிக்க வேண்டும் என்று ஹேமந்த்தான் சித்ராவிடம் சொல்லுவாராம்.. யார் யாருடன் சித்ரா பேச வேண்டும் என்பதையும் ஹேமந்த்தான் முடிவு செய்து சொல்லி வந்துள்ளார்.

டார்ச்சர்
ஏற்கனவே வீடு கட்ட வாங்கிய கடன், கடனில் வாங்கிய ஆடிக்கார், கல்யாண செலவு என பல பிரச்சனைகளில் சித்ரா தவித்து வரும்போது, ஹேமந்தின் இந்த குடைச்சலால் கதறி கதறி அழும் நிலை ஏற்பட்டுள்ளது.. இறுதியில் சீரியலில் நடிக்க வேண்டாம் என்று ஹேமந்த் அடுத்த டார்ச்சரை தந்தாராம்.. இதைதான் கடைசி நேரத்தில் தன் மாமனார் ரவிச்சந்திரனிடம் செல்போனில் சொல்லி அழுதிருக்கிறார் சித்ரா.

மாமனார்
"இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் நடக்க இருக்கும் போது, ஹேமந்த் செய்யும் டார்ச்சர்களை என்னால் தாங்க முடியவில்லை" என்று கண்ணீர் விட்டு அழுது சொல்லி உள்ளார்.. மாமனாரிடம் சித்ரா பேசியபிறகுதான், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இந்த செல்போன் ஆடியோவைதான் ஹேமந்த் அவசர அவசரமாக அழித்துள்ளார்.. இறுதியில் இதே ஆடியோதான் ஹேமந்த்தை வசமாக சிக்க வைத்துவிட்டது.

காதல்
இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், ஹேமந்த் ஏற்கனவே 5 பெண்களை லவ் பண்ணினாராம்.. மேலும் இரவு நேர பார்ட்டிகள், பப்கள், போன்றவற்றுக்கு சென்று விடிய விடிய போதையில் பொழுதை போக்கியவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதைதான் ஏற்கனவே சித்ராவின் தோழிகள் அறிந்து, அதுகுறித்து அலர்ட் செய்திருக்கிறார்கள்.. ஆனால் காதல் கண்ணை மறைத்து, சித்ராவையே விழுங்கிவிட்டது !
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications