கழுவ போகணும்.. கமல் அரசியல் எதிர்காலத்திற்கே சவுக்கடி தரும் பிக்பாஸ்.. வசமாக மாட்டிக்கிட்டாரே.. ஷாக்
சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசனின் அரசியல் எதிர்காலத்திற்கே சிக்கலாக மாறும் விதமாக ஒரு சம்பவம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடந்து உள்ளது.
கமல் ஹாசன் 2024 லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் கமல் தொகுத்து வழங்கும் விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கமல் ஹாசன் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள் சரியில்லை.
அவர் பிரதீப்பை விசாரிக்காமல் அனுப்பிவிட்டார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்று விமர்சனம் செய்யப்பட்டது. தற்போது அவர் மாயாவை தீவிரமாக ஆதரிப்பதும், மாயாவிடம் மட்டும் நட்பாக பேசுவதும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அர்ச்சனாவை விமர்சனம் செய்வது என்று அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அவரின் இந்த செயல்.. அரசியலுக்கு வந்து பதவிகள் கிடைத்தாலும் அவர் இப்படித்தானே தவறாக முடிவுகளை எடுப்பார் என்று விமர்சனமாக மாறி உள்ளதாம். இதனால் கமல் ஹாசனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள்.. அரசியல் வாழ்க்கையே உங்களுக்கு போயிடும். வேண்டாம். இனி பிக் பாஸ் மூலம் பெயரை கெடுக்க வேண்டாம்.
வெளியே வந்து விடுங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்களாம். இதனால் கமல் ஹாசன் 2024 லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி சம்பவம்: இப்படிப்பட்ட நிலையில்தான் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து உள்ளது. அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு நடிகர்களாக வேஷமிட்டு அவர்களின் பாடல்களுக்கு ஆடினார்கள்.
உதாரணமாக போக்கிரி விஜய், படையப்பா ரஜினி போன்றெல்லாம் கெட்டப் போட்டு இவர்கள் நடனம் ஆடினார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் துபாய் ரிட்டர்ன் வடிவேலு கெட்டப் விக்ரமிற்கு கொடுக்கப்பட்டு இருந்தது. நடிகர் வடிவேலுக்கு பல சிறப்பு தோற்றங்கள், கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு.. விக்ரமிற்கு இந்த ரோல் கொடுக்கப்பட்டது.
இதை பயன்படுத்திக்கொண்டு.. விக்ரமும்.. தான் கக்கூஸ் கழுவ போகிறேன் என்று காமெடி செய்தார். கக்கூஸ் கழுவுவதை கிண்டலாக இழிவாக சித்தரித்து காமெடி செய்ததுதான் துபாய் காமெடி வடிவேலு ரோல். இதை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் காமெடி செய்தது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
கடும் விமர்சனம்: இதை நெட்டிசன் ஒருவரும் குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்., அதன்படி, தோழர் ஆதி என்பவர் செய்துள்ள போஸ்டில், வடிவேலு காமெடி, Roles வேற எவ்ளவோ இருக்கு.. #BiggBossTamil6 ல விக்ரமன் இதை பற்றி பேசினத பாராட்டி, BB கொண்டாட்டமில் அவங்களை வரவைத்து நிகழ்ச்சி நடத்தி, இவ்ளோ பண்ணிட்டு, இப்ப மறுபடியும் அடுத்த சீசன்ல அதே ரோல கொடுத்தா என்ன அர்த்தம்?
ஒரு விஷயம் தெரியாதப்ப தவறு செய்தா பரவால்ல.. தெரிஞ்சே செஞ்சா எப்படி? என்ற கேள்வி கேட்டுள்ளார். கடந்த சீசனில் மலம் அள்ளுவது, டாய்லெட் கழுவுவது பற்றி ஆக்கபூர்வமாக பேசிவிட்டு இந்த சீசன் அதை வைத்தே காமெடி செய்யும் சூழ்நிலையை உருவாக்குவது விமர்சனத்தை சந்தித்துள்ளது. அரசியல் ரீதியாக இது கமல் ஹாசனுக்கு எதிராக திரும்பும் என்ற சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications