அமைச்சர் செந்தில்பாலாஜி எப்படி இருக்கிறார்? புழல் சிறையில் முதல் வகுப்பு அறை! சகலவிதமான வசதிகள்!
சென்னை: காவேரி மருத்துவமனையிலிருந்து செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புழல் சிறை மருத்துவமனை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, மின் விசிறி, கட்டில், மெத்தை, படுக்கைவிரிப்பு, நாளிதழ்கள், நாற்காலி, மேஜை என எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஏசி ஒன்று தான் இல்லையே தவிர மற்றபடி எந்தக் குறையும் இல்லாமல் அமைச்சருக்கான முதல் வகுப்பு சலுகைகள் புழல் சிறையில் செய்து தரப்பட்டுள்ளன.

அமைச்சர் செந்தில்பாலாஜி இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர் என்பதால் அவருக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் எனக் கருதப்படுகிறது. இதனால் புழல் சிறை மருத்துவர்கள் காலை, மாலை என செந்தில்பாலாஜியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
நேற்றிரவு அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் வழங்கப்பட்ட இரண்டு சப்பாத்திகளை மட்டும் சாப்பிட்டிருக்கிறார். இன்று காலை சிறை கேண்டீனில் இருந்து இட்லி வாங்கிச் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சிறை உணவுகள் பிடிக்கவில்லை என்றால் விசாரணை கைதியாக உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிலிருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறின்றி வெளிச்சாப்பாட்டை சிறைக்குள் எடுத்து வரமுடியாது.
புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறியும், வாழைப்பழமும் வழங்கப்படுவது வழக்கமாம். அமைச்சர் செந்தில்பாலாஜி கோழிக்கறி வேண்டாம் என்று கூறிவிட்டால் அவருக்கு நெய்யும், வாழைப்பழமும் மட்டும் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக புழல் சிறையில் சாதம், சாம்பார், கூட்டு ஆகியவை மதிய உணவாக தரப்படும். செந்தில்பாலாஜி முதல் வகுப்பு விசாரணை கைதி என்பதால் கேண்டீனில் தனக்கு பிடித்த உணவை அவர் வாங்கி சாப்பிட்டிருக்கலாம்.
இதனால் தற்போதைய சூழலில் அவர் புழல் சிறை கேண்டீன் உணவுகளையே சாப்பிட்டு வருகிறார். பொன்முடி வீட்டில் ரெய்டு, விசாரணை என பரபரப்பான செய்திகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் தினசரி நாளிதழ்களை படித்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. வரும் 26ஆம் தேதியோடு நீதிமன்ற காவல் முடிவதால் அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இதனிடையே செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா, தனது கணவர் விடுதலை பெற வேண்டி திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள திருநெடுங்கள நாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications