முக அழகிரி மகன் துரை தயாநிதி எப்படி இருக்கிறார்? பழைய மனக்கசப்புகளை மறந்த குடும்ப உறவுகள்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், துர்கா ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் நலம் விசாரித்ததுடன் துரை தயாநிதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடத்தியிருக்கிறார்கள்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை அவரது தந்தை அழகிரி, தாய் காந்தி அழகிரி, மனைவி அனுஷா ஆகியோர் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்கள். இந்த வயதில் மகனுக்கு இப்படியொரு நியூரோ பிரச்சனை வரும் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்காத மு.க.அழகிரி ரொம்பவே மனதளவில் கஷ்டப்பட்டு வருகிறார். அவரை தேற்றும் வகையில் குடும்ப உறுப்பினர்களும், மதுரையை சேர்ந்த அவருக்கு நெருக்கமானவர்கள் சிலரும் நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமைக்கு இன்று ஓரளவு பரவாயில்லை, துரை தயாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புயல் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்தியிலும் தனது அண்ணன் மகனை பார்ப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு விசிட் அடித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிகிறார். .
துரை தயாநிதியை பொறுத்தவரை மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் தனியாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிடுமாறு அழகிரி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் அமைதியான வாழ்க்கையையே விரும்பி சென்னை பக்கம் சென்றுவிட்டார். தனது அப்பாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் இல்ல விழாக்கள் உட்பட ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்தால் தான் மதுரை பக்கமே சென்று வந்தார்.
துரை தயாநிதியை பொறுத்தவரை தனது சித்தப்பா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் எப்போதும் இணக்கமாக நடந்துக்கொள்வார். தனது அப்பாவும், சித்தப்பாவும் பேசிக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக தாம் சித்தப்பா ஸ்டாலின் குடும்பத்தினருடன் பேசாமல் இருந்ததில்லை.












Click it and Unblock the Notifications