நல்லாயிருக்காரு நல்லகண்ணு.. உடல்நிலையில் நல்ல முன்னேற்றமாம்.. தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்
சென்னை: மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பான சிகிச்சை நல்ல பலனை தந்து வருவதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, நல்லகண்ணு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்துவிட்டார்.. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. எனவே, சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டது.. அவரை மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அப்போது 100 வயதான நல்லகண்ணுவுக்கு வயது மூப்பு காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதய மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.. பிறகு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
மருத்துவர்கள் குழு
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டதில், நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான சிகிச்சை நடந்து வருவதாகவும் கூறினார்கள்..
இதனிடையே, நல்லகண்ணு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனைக்கு வந்து நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். தவெக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோர் செல்போனில் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
விரைந்த சிவகார்த்திகேயன்
நேற்று நடிகர் சிவகார்த்திகேயன், அயலான் பட இயக்குநர் ரவிக்குமார் இருவரும் மருத்துவமனைக்குச் சென்று நல்லக்கண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.. தோழர்களிடம் பேசி முறையான அனுமதி பெற்று நல்லகண்ணுதோழரை நானும் சிவகார்த்திகேயனும் சந்தித்தோம் என்று ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.
தற்போது மருத்துவமனையில் நல்லகண்ணுவின் மகள் டாக்டர் ஆண்டாள் உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்.. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன், நா.பெரியசாமி, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோரும் மருத்துவமனையில் தங்கி நல்லகண்ணுவை கவனித்து வருகின்றனர்.
நல்ல முன்னேற்றம்
இப்போது நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. தன்னை சந்திக்க வருபவர்களை அடையாளம் கண்டு கொள்கிறாராம்.. கூப்பிட்டதும் அந்த சத்தம் கேட்டு அவர்களை திரும்பி பார்க்கிறாராம்..
நல்லகண்ணுவுக்கு மேலும் சில டெஸ்ட்களை எடுத்திருக்கும் நிலையில், அது தொடர்பான சிகிச்சையும் பலனை தந்து வருகிறதாம்.. தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் விலைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மா சுப்பிரமணியம் பேட்டி
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து அமைச்சர் பேசியபோது, "கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரின் உறவினரை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார்.
மறுபடியும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications