Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தொடக் கூடாது".. கொளுத்தி போட்ட சு.சுவாமி.. பற்றி எரியும் விவகாரம்.. அதிர்ந்து போன டெல்லி மேலிடம்..!

: சுப்பிரமணிய சாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவிலேயே இருந்து கொண்டு, பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை சொல்லி, பாஜக தலைவர்களேயே தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குபவர் சுப்பிரமணிய சாமி.. இப்போதும் சேம்சைட் கோல் ஒன்று போட்டு, டெல்லி மேலிடத்தையே மிரள வைத்துள்ளார்

'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்பது பாஜகவின் முழக்கமாகும்.. ஆரம்பத்தில் இதற்கு ஒருசிலரே ஆதரித்தாலும், பலர் கடுமையான எதிர்ப்புகளை இன்னமும் தெரிவித்து வருகின்றனர்..

"மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்" என்று இப்படி முதன்முதலாக சொல்ல ஆரம்பித்ததே வாஜ்பாய் ஆட்சியில் துணைபிரதமராக இருந்த அத்வானிதான்..

 ஒரே முழக்கம்

ஒரே முழக்கம்

அதைதான் இப்போது பாஜக தன்னுடைய குறிக்கோளில் ஒன்றாக அறிவித்துள்ளது.. இன்னும் ஓபனாக சொல்ல வேண்டுமானால், மாநிலங்களின் உரிமைகளை பறித்து விட்டு, மத்தியில் ஒரே ஆட்சி என்று கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.. அதன் தொடர்ச்சியாகத்தான், 2009-ம் ஆண்டு எம்பி தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் "ஒரே தேசம், ஒரே தேர்தல்" இடம்பெற்றது.

எடப்பாடி

எடப்பாடி

இதே கோஷத்தை சமீப காலமாக எடப்பாடி பழனிசாமியும் நினைவூட்டி கொண்டிருக்கிறார்.. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வந்தால் திமுக ஆட்சியில் நீடிக்காது.. இந்த ஆட்சி இன்னும் கொஞ்சம் காலத்துக்குதான் என்று செல்லுமிடமெல்லாம் காட்டமாக கூறி வந்து கொண்டிருக்கிறார்.. இப்போது 5 மாநில தேர்தலில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, அண்ணாமலையும் இங்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார். இதைவிட ஆச்சரியம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று தேர்தல் ஆணையரே சொல்லியிருக்கிறார்.. இதைதான் சிபிஎம் பாலகிருஷ்ணன் நேற்றைய தினம் தன்னுடைய சந்தேகமாக எழுப்பியிருந்தார்.

 பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று தேர்தல் ஆணையர் கூறியிருப்பது பாஜகவை திருப்திப்படுத்த கூறியிருக்கலாம்.. மற்றபடி அதையெல்லாம் கொண்டுவர முடியாது... அதேபோல், தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை 2024 ஒரே தேர்தல் வரும் என சொல்வதும், தேர்தல் ஆணையம் அவ்வாறு சொல்வதும் ஏன் என்று தெரியவில்லை... நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்படபடவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் வாய்ப்புமில்லை.. இதெல்லாம் பகல் கனவு" என்று மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் சொன்னதை நினைவுகூர வேண்டி உள்ளது.

 சுப்பிரமணியசாமி

சுப்பிரமணியசாமி

இப்படி அனைத்து தரப்பிலும், "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற பாஜகவின் முழக்கத்திற்கு எதிரான கண்டனங்கள், கருத்துக்கள் வெடித்து வந்து கொண்டிருக்கும்போது, பாஜகவில் இருந்தே ஒரு எதிர்ப்பு குரல் வருகிறது என்றால், அது சுப்பிரமணிய சாமி தவிர வேறு யாராக இருக்க முடியும்? எல்லா விஷயத்துக்கும் சேம்சைட் கோல் போடும் சாமியேதான் இதற்கும் ஒரு கருத்தை சொல்லி உள்ளார்.

பேட்டி

பேட்டி

காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் ஸ்ரீ கால சாந்தி வைபவ நிகழ்ச்சி காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுப்பிரமணியம் சுவாமி கலந்து கொண்டார்.. செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:

 சமஸ்கிருதம்

சமஸ்கிருதம்

"திராவிடம் என்று சொல்லி வந்த கருணாநிதி அவர் பெயரிலேயே, கருணா என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததது.. அதேபோல "நிதி" என்று சொல்லும் சமஸ்கிருத வார்த்தை தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் சின்னமான 'உதயசூரியன்' என்ற சொல்லும் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது... சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளேன்.

 தொட முடியாது

தொட முடியாது

இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மறுபடியும் மறுபடியும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என்று சொல்லிட்டு இருக்காங்க.. யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது. முதல் மனுவில் சேது சமுத்திர திட்டத்தை தொடக் கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்... பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது, அது முடிந்துவிட்டது. அதேபோல, ஒரே நாடு ஒரே தேர்தலும் நடக்காது, அதற்கு வாய்ப்பில்லை" என்றார். பாஜக தலைவர்கள் அனைவருமே ஒரே நாடு ஒரே தேர்தல் கோஷத்தை முன்னெடுத்து வரும்போது, அக்கட்சியின் மூத்த தலைவராக பார்க்கப்படும் சுப்பிரமணி சுவாமியே இப்படி சொல்வது அரசியல் வட்டாரத்தில் மறுபடியும் பேசுபொருள் ஆகியுள்ளது...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+