ஜாமீன் ரத்துக்கு பிறகு! புழல் சிறையில் செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார்? சிறை துறை டிஐஜி பரபரப்பு
சென்னை: சென்னை புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படியிருக்கிறார் என்பது குறித்து சிறைத் துறை டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜூன் 16ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20ம் தேதிகளில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் அக்டோபர் 10-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் நேற்றும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அக்டோபர் 10ஆம் தேதி சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில் சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அக்டோபர் 11 ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கு 11 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு "இதய அறுவை சிகிச்சை செய்ததிலிருந்தே உடல்நிலை முழுவதுமாக குணமடையவில்லை. அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் " என வாதம் செய்தனர். இதை கேட்ட நீதிபதி ஜெயசந்திரன், இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணை மீண்டும் 16ஆம் தேதி வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக ஜெயச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதன்படி 19ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் நீதிபதி கூறுகையில் மருத்துவ காரணங்களை காட்டி ஜாமீன் கொடுக்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார். அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளதால் சாட்சியை கலைக்க வாய்ப்பு உள்ளது. கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய புகாரும் செந்தில் பாலாஜி மீது உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அவருடைய காவல் வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை 9ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் 30 -ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இந்த நிலையில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார் என்பது குறித்து சிறைத் துறை டிஐஜி கனகராஜ் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜி மன அழுத்தத்தில் உள்ளார். அவரது உடல் எடை குறைந்துள்ளது. சிறையில் நூலகத்தில் அவர் நேரத்தை செலவிடுகிறார். செந்தில் பாலாஜிக்கு தேவைப்படும் போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
-
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications