மோடி குரல் தமிழில் பாடும் ஏஐ வீடியோக்களை சமீபத்தில் பார்த்தீங்களா? பின்னாலுள்ள பாஜகவின் திக் பிளான்
சென்னை: கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி தமிழ் மொழியில் பாடும் ஏஐ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு பின் முக்கியமான அரசியல் ஒன்று உள்ளதாம்.
ஏஐக்கள் வந்த பின் எல்லாம் சகஜமாகிவிட்டது. சாட் ஜிபிடி எல்லாம் பழசு என்று சொல்லும் அளவிற்கு பல புதிய ஏஐக்கள் வந்துவிட்டன. பல புதிய சேவைகளை செய்யும், புதிய பயன்பாடுகளுக்கு என்று நவீன ஏஐக்கள் வந்துவிட்டன.

பல விஷயங்களுக்கு ஏஐ பயன்பாடு வந்துவிட்டது. ஏஐ பயன்பாடு என்பது நல்ல விஷயம் என்பதை தாண்டி கெட்ட விஷயங்களுக்கும் கூட பயன்பட தொடங்கிவிட்டது.
ராஷ்மிகா வீடியோ: சமீபத்தில் கூட ராஷ்மிகாவின் ஏஐ வீடியோ இணையத்தில் டிரெண்டானது. மேலாடையை ஆபாசமாக இருக்கும் வீடியோ ஒன்று எடிட் செய்யப்பட்டு இருந்தது. வேறு ஒரு பெண் மாடலின் வீடியோவை எடிட் செய்து அதில் ஏஐ டீப் பேக் முறையில் ராஷ்மிகா புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கு ராஷ்மிகா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். பல திரையுலக நட்சத்திரங்கள் இதை விமர்சனம் செய்து இருந்தனர். மத்திய அரசும் கூட இது தண்டனைக்கு உரிய குற்றம் என்று விமர்சனம் செய்து இருந்தது.
மோடி குரல்; கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி தமிழ் மொழியில் பாடும் ஏஐ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு பின் முக்கியமான அரசியல் ஒன்று உள்ளதாம்.
இந்த வீடியோக்கள் பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில்தன வைரலாகி வருகின்றன. அதில் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, தேன்மொழி பூங்கிளி தொடங்கி பல்வேறு பாடல்களில் மோடி குரலில் தமிழில் பாடுவது போல எடிட் செய்யப்பட்டு உள்ளது.
ஆடியோ எடிட்டி சாப்ட்வேர் மூலம் இந்த பாடல்கள் எடிட் செய்யப்பட்டு அதில் மோடி குரல் சேர்க்கப்படுகிறது. உலகம் முழுக்க இப்படி பல அரசியல் தலைவர்களின் குரல்களில் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
மோடி அரசியல்: ஆனாலும் மோடியின் இந்த வீடியோ டிரெண்டிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி
இந்தியா என்ற பன்முக மொழி கொண்ட நாட்டில் மோடியை எல்லோரின் மொழியிலும் பேச வைக்க முடியும். இதன் மூலம் மோடி, இந்தி மொழி அல்லாதவர்களின் இதயங்களை வெல்வதற்கும் உதவியாக இருக்கும், அவரிடம் எளிதாக சென்றுசேர முடியும் என்று மெய்நிகர் AI மியூசிக் ஸ்டுடியோ Mayk.it இன் இணை நிறுவனர் ஹென்ரிச் தெரிவித்துள்ளார்.
மோடி பின்னால் யார்?: இப்போது இதை பலர் மீம் கிரியேட்டர்கள் விளையாட்டாக செய்தாலும் வரும் நாட்களில் இதை வைத்து பாஜக மாஸ்டர்பிளான் ஒன்றை போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி.. தேர்தல் நேரத்தில் மோடி தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் பேசுவது போல் வீடியோ உருவாக்கி அதை டிரெண்ட் செய்யும் திட்டம் உள்ளதாம். அவர் குரலிலேயே அவர் தமிழில் பேசுவது போல டிரெண்ட் செய்ய இருக்கிறார்களாம். அதாவது தேர்தல் நேரத்தில் மோடியை இந்தி அல்லாத மாநிலங்களுக்கு கொண்டு செல்ல பாஜக இந்த திட்டத்தை இறக்கி உள்ளதாம்.
பாஜக பொதுவாக சமூக வலைத்தளங்களை எளிதாக அரசியலுக்கு பயன்படுத்தும். ட்விட்டரை தேர்தலுக்கு பயன்படுத்தும் வித்தையை இந்தியாவிற்கு கொண்டு வந்ததே பாஜகதான். அவர்களிடம்தான் இந்தியாவின் பெரிய ஐடி விங் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்து ஏஐயை பாஜக கையில் எடுக்க போவதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications