சென்னை விமான நிலைய விரிவாக்கம் எப்படி அமைய வாய்ப்பு உள்ளது? விரிவான கேள்வி பதில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துவிட்டார். அதேநேரம் 55 மில்லியன் மக்களை கையாளும் அளவிற்கு சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் கூறினார். அதற்கே வடமேற்கே விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறினார். வடமேற்கே கவுல் பஜார், பொழிச்சலூர் உள்ளது. இவர்கள் வெளியேற்றப்படுவார்களா.. அல்லது வேறு என்ன வாய்ப்பு உள்ளது என்ற பல கேள்விகள் மக்களுக்கு இருக்கும். அவர்களுக்காக இந்த கேள்வி பதில் வடிவிலான சந்தேகங்களை பார்ப்போம். குறிப்பு இது ஆய்வு செய்தி மட்டுமே.. இப்படி நடக்கலாம் என்கிற பார்வை மட்டுமே. முழு விவரத்தை அரசு அல்லது விமான நிலைய ஆணையம் அறிவித்தால் மட்டுமே தெரியவரும்

கேள்வி 1 : விமான நிலையம் பின்புறம் உள்ள கவுல் பஜார்ரை தாண்டி சற்றே தள்ளி விமான நிலையம் தொடர்பான பணிகள் நடக்க போகிறதா ? கவுல் பஜார் மக்களை வெளியேற்றிவிட்டே இதனை செய்ய முடியுமா?"

How is the Chennai airport expansion likely to take shape Detailed Q amp amp A

பதில்: கவுல் பஜார் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றாமல் அதேநேரம் மிக குறைந்த நிலத்தைக் கையகப்படுத்தாமல் திட்டத்தை முடிப்பதற்கான வழிமுறையையே அரசு பார்ப்பதாக தெரிகிறது. தற்போதுள்ள சாலைகளின் எல்லைக்கு உட்பட்டே இந்தச் சாலை மற்றும் மேம்பாலக் கட்டுமானங்கள் திட்டமிடப்படுகிறது. எனவே, கவுல் பஜாரில் மிகப்பெரிய அளவில் நிலத்தைக் கையகப்படுத்தி மக்களை காலி செய்யும் திட்டம் இதில் இருப்பதாக தெரியவில்லை.

கேள்வி 2 :: விமான நிலைய விரிவாக்க பணியில் சரக்கு வழிப்பாதை கவுல் பஜாரைத் தாண்டி தள்ளிச் செல்கிறதா?

ஆம், இந்தப் புதிய 5.2 கி.மீ சரக்கு வழிப்பாதை சென்னை அவுட்டர் ரிங் ரோட்டினை நேரடியாக இணைக்கும். தற்போது ஜி.எஸ்.டி சாலையில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, விமான நிலையத்திற்குப் பின்புறமாக ஒரு புதிய அணுகுசாலையை உருவாக்க விமான நிலையத்தினை திட்டமிட்டுள்ளது.
அடையாறு ஆற்றின் மேலே தூண்கள் அமைத்து உயர்த்தப்பட்ட மேம்பாலமாக வரவுள்ளதால், குடியிருப்புப் பகுதிகளை பாதிக்காமல் ஆற்றின் போக்கிலேயே இது செல்லும்.

கேள்வி 3. மக்களை வெளியேற்றிவிட்டுத்தான் செய்ய முடியுமா?

மக்களை வெளியேற்ற வேண்டிய அவசியமே இருக்காது. அந்த பகுதியில் 'உயர்த்தப்பட்ட மேம்பாலம்' அமைக்கப்படும் என்பதால் நீர்நிலை மற்றும் சாலை கட்டமைப்புகளின் மேலே தூண்கள் அமைக்கப்படவே வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அண்ணா பல்கலைக்கழக நீர்வள மையத்தின் அறிக்கையின்படி, அடையாறு ஆற்றில் தூண்கள் அமைப்பதால் வெள்ளப் பாதிப்போ அல்லது நீரோட்டத் தடங்கலோ வராது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேள்வி 4: "அப்படி என்றால் கவுல் பஜாருக்கு அடுத்து உள்ள பகுதியில் விமான நிலையத்தின் ஐந்தவாது முனையம் வரப்போகிறதா?"

இல்லை, ஐந்தாவது முனையம் கவுல் பஜாருக்கு அடுத்த இடத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வரப்போவது கிடையாது. விமான நிலைய அதிகாரப்பூர்வ திட்டத்தின்படி, ஐந்தாவது முனையம் கவுல் பஜார் ஊருக்குள் அல்லது குடியிருப்பு நிலங்களில் அமையாது. இது விமான நிலையத்தின் தற்போதைய எல்லைக்குள்ளேயே, இரண்டு ஓடுபாதைகளுக்கும் இடைப்பட்ட "V" வடிவ காலியிடத்தில் சாட்டிலைட் முனையமாக அமைக்கப்படவுள்ளது.

கேள்வி 5 : கவுல் பஜார் / பொழிச்சலூர் பகுதியை ஒட்டி என்ன வரும்?

விமான நிலையத்தின் வடமேற்கு/பின்புற திசையில் கவுல் பஜாரைத் தாண்டி உள்ள நிலப்பரப்பு வழியாக சரக்கு போக்குவரத்துப் பாதை மற்றும் மேம்பாலம் ) மட்டுமே வர வாய்ப்பு உள்ளது. இந்தச் சாலை மற்றும் மேம்பாலம் சென்னை அவுட்ட ரிங்ரோடு தொடங்கி அடையாறு ஆற்றின் மேலே தூண்கள் மூலம் சென்று விமான நிலையத்தின் பின்புற இணைப்பை ஏற்படுத்தும். எனவே, டெர்மினல் 5 என்ற பெரிய பயணிகள் முனையக் கட்டிடம் விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே அமையும்; அதன் போக்குவரத்துக்கான அணுகுசாலை மட்டுமே கவுல் பஜார் பகுதியின் எல்லைகளைத் தாண்டி/மேலே செல்லக்கூடும்.


கேள்வி 6 : குடியிருப்புகள் அகற்றப்படுமா?

இத்திட்டம் "இருக்கின்ற குறைந்தபட்ச நிலப்பரப்பை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதை" மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. எனவே, கவுல் பஜார் போன்ற வெளிப் பகுதிகளில் பெரிய அளவில் வீடுகளை இடித்து நிலத்தைக் கையகப்படுத்தும் அவசியம் இத்திட்டத்திற்கு இருக்காது என்றே நம்பப்படுகிறது.
இந்த சரக்கு முனையம் மற்றும் இணைப்புப் பாதை என்பது ஜி.எஸ்.டி சாலையில் உள்ள நெரிசலைக் குறைக்க, விமான நிலையத்தின் பின்புறத்தில் அமைக்கப்படும் புதிய வழிப்பாதை உயர்த்தப்பட்ட பாலமாகவே திட்டமிடப்படுகிறது.

அதேநேரம் டெர்மினல் 5 ஐ பொறுத்தவரை தற்போதைய டெர்மினல் 1, 2, 4 ஓடுபாதையைக் கடந்து நடுவில் உள்ள "V" பகுதிக்கு பயணிகளை எவ்வாறு அழைத்துச் செல்வது என்பது மிகப்பெரிய சவால் ஆக இருக்கும். இதற்காகத் தரைக்கு அடியில் சுரங்கப் பாதை அல்லது தானியங்கி மக்கள் நகர்த்தி அமைப்பது குறித்து AAI பரிசீலித்து வருகிறது. ஏனெனில் இரண்டு ஓடுபாதைகளுக்கும் நடுவில் கட்டிடம் கட்டும்போது, விமானங்களின் கட்டுப்பாடற்ற இறக்கம்/ஏற்றத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாதவாறு முனையத்தின் உயரத்தைக் குறைவாக வடிவமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அத்துடன்
விமானங்கள் நகர்வதற்கான வரிசைப் பாதைகள் போதுமான அளவு ஒதுக்கப்பட வேண்டும்.


சவால்கள் என்ன

முதல்வர் விஜய் சொன்ன 55 மில்லியன் என்பது சென்னை மீனம்பாக்கத்தின் அதிகபட்ச கொள்ளளவாக இருக்கும். அடுத்த 20-30 ஆண்டுகளில் சென்னையின் வான்வழிப் போக்குவரத்து இதைவிட இருமடங்காக அதிகரிக்கும் போது, மீனம்பாக்கத்தை மேலும் விரிவாக்கம் செய்யவே முடியாது என்பதே எதார்த்தமான உண்மை

ஒரே ஓடுபாதை கட்டுப்பாடு

சென்னை மீனம்பாக்கத்தில் இரண்டு ஓடுபாதைகள் இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ளும் அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. எனவே ஒரே நேரத்தில் இரண்டு ஓடு பாதைகளையும் முழுத் திறனுடன் பயன்படுத்தவே முடியாத நிலை இருக்கிறது.

இரண்டாவது விமான நிலையம் காலத்தின் கட்டாயம்

உலகளாவிய பெரிய நகரங்கள் (லண்டன், நியூயார்க், மும்பை) அனைத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. சென்னை தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் முன்னணி நகரமாக உள்ளது. இப்போது உள்ள மக்கள் தொகை மற்றும் மிதக்கும் மக்கள் தொகைக்கே(வெளியூர்களில் இருந்து வந்து வசிப்பவர்கள்) கட்டாயம் 2 விமான நிலையம் இருக்க வேண்டும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தும் உள்ளது.எனவே சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இதனை தாமதிப்பது என்பது 20 ஆண்டுகள் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்லும் என்பதே பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில்துறையினரின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+