Good Bad Ugly Review: குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? ஹிட்டா? ஃபிளாப்பா? நெட்டிசன்கள் ரிவ்யூ
சென்னை: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே குட் பேட் அக்லி படம் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக அஜித் படங்கள் பெரிதாக கொண்டாட்டமாக இல்லாமல்.. கதையை மையப்படுத்தி வெளியாகி வந்தது.

ஆனால் குட் பேட் அக்லி படம் அப்படி இல்லாமல் முழுக்க முழுக்க கமர்ஷியல் கொண்டாட்டத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். அவரின் பழைய பட referenceகள் தூக்கலாக போடப்பட்டு.. அஜித்திற்கு மாஸ் டயலாக் வைக்கப்பட்டு குட் பேட் அக்லி படம் எடுக்கப்பட்டு உள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு பக்கம் அசத்தலாக இருக்கிறது என்று நல்ல விமர்சனங்களை பெற்றது. இன்னொரு பக்கம் அஜித் படங்களில் ரீல்ஸ் போல இருக்கிறது என்று கிண்டலாகவும் பலர் கமெண்ட் செய்து இருந்தனர்.

இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மற்ற மாநிலங்களில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகி உள்ளது. 9 மணிக்கு பின்பாக தமிழ்நாடு திரையரங்குகளில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை பார்த்த நெட்டிசன்கள் கொடுத்த ரிவ்யூக்கள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.

குட் பேட் அக்லி நெட்டிசன்ஸ் ரிவ்யூ:
கேரளா ரசிகர்கள் சிலர்.. இந்த படம் பிளாக்பஸ்டர். இதுதான் படம். நாங்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் எங்களுக்கே படம் பிடித்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர். மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்றுள்ளனர்.

விமர்சகர் ரமேஷ் பாலா செய்துள்ள போஸ்டில், இது அஜித்தின் மாஸ் படம். அவருக்கான பிளாக்பஸ்டர் படம். வின்டேஜ் அஜித் மீண்டும் வந்துள்ளார். அசத்தலாக உள்ளது என்றுள்ளார். படத்திற்கு எல்லா பக்கத்தில் இருந்தும் பாசிட்டிவ் ரிவ்யூ வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அஜித்திற்கு இது கெரியர் பெஸ்ட் படம். சில இடங்களில் கேள்வி கேட்கும் வகையில் இருந்தாலும் படம் மாஸ் என்டர்டெயினர் படம். கடைசி வரை வேகமாக செல்கிறது. அர்ஜுன் தாஸ் நடிப்பு சிறப்பாக உள்ளது. படம் மிகவும் எமோஷனலாக இருக்கிறது. அதோடு ஸ்டைலிஷ் குறையாமல் இருக்கிறது என்று கமெண்ட் செய்து உள்ளனர்.

இன்னும் சில நெட்டிசன்கள்.. படத்தின் சில காட்சிகள் ஓகே ரகம். ஆனாலும் கண்டிப்பாக படம் மாஸ் என்டர்டெயினர். முக்கியமாக தமிழில் பெரிய கமர்ஷியல் ஹிட் படமாக இருக்கும். இண்டர்வல் சிறப்பாக உள்ளது. ரெட் டிராகன் வருகைக்கு காத்திருக்க வைக்கிறார்கள். படத்தில் அந்த அளவிற்கு காட்சிகள் சிறப்பாக உள்ளன. கிளைமேக்சில் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு காட்சிகள் உள்ளன என்றும் சில நெட்டிசன்கள் கூறி உள்ளனர்.

அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் நிச்சயமாக திருப்திப்படுத்தும் ஒரு மேட்னஸ் மாஸ் என்டர்டெய்னர். எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர். முக்கியமாக மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications