அண்ணாச்சி உடம்புக்கு என்னாச்சு... அப்போலோவில் எப்படி இருக்கிறார் வசந்த்குமார் எம்.பி..?
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. வசந்த்குமார் வெண்டிலேட்டரில் இருக்கிறார்.
நேற்று மதியம் வரை இயல்பு நிலையில் இருந்த ஆக்ஸிஜன் அளவு திடீரென குறையத் தொடங்கியதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வசந்தகுமார் எம்.பி.யின் உடல்நிலை குறித்து அறிவதற்காகவும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்பதற்காகவும் அவரது மகன் விஜய் வசந்தை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு;

அறிகுறி இல்லை
''அப்பாவை கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். கொரோனா சோதனை நடத்தி அதன் முடிவு வந்த பின்னர் தான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதே தெரிய வந்தது. அதுவரை அவருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. சளி, காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் என எந்த அறிகுறியும் அவருக்கு இல்லை''.

அம்மா நலம்
''அப்பாவுக்கு திடீரென கொரோனா என முடிவு வந்ததும் அம்மாவுக்கும் சோதனை நடத்தினோம். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆலோசித்த நிலையில், வீட்டில் சிறிய பிள்ளைகள் இருப்பதால் மருத்துவமனைக்கே சென்றுவிடுகிறேன் எனக் கூறினார் அப்பா. இப்போது அம்மா இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்''.

ஐ.சி.யூ. சிகிச்சை
''அப்பாவுக்கு மட்டும் சிகிச்சை போய்கொண்டு இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று வரை நன்றாக பேசிக்கொண்டு இருந்தார். எப்போது டிஸ்சார்ஜ் ஆவது என்பது பற்றியெல்லாம் கேட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் நேற்று மதியத்துக்கு பிறகு ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைந்ததால் தற்போது ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்''.

சர்க்கரை நோய்
''அப்பா உங்களை அடையாளம் காண்கிறாரா, என நாம் கேட்டதற்கு, ''மயக்க நிலையில் இருப்பதால் இப்போது அவரால் அது முடியாது. நேற்றைக் காட்டிலும் இன்று அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அப்பாவின் உடல்நிலையை கண்காணித்து அதற்கேற்ற சிகிச்சையை தருகின்றனர். அப்பாவுக்கு சர்க்கரை நோய் மட்டும் தான் உள்ளது. அதை தவிர வேறு எந்த இணை நோயும் கிடையாது.''
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications