புல்லட் ரயிலே ஓட்டுறாங்களே.. விபத்தை தடுக்க ஜப்பான், அமெரிக்கா என்ன செய்கிறது தெரியுமா?
சென்னை: ஒடிசாவில் ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய ரயில் விபத்து உலகையே உலுக்கி இருக்கும் நிலையில், புல்லட் ரயில்களை இயக்கி வரும் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் விபத்துகளை தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றுகின்றன என்பதை விரிவாக பார்ப்போம்.
புல்லட் ரயில்களுக்கு பெயர்போன ஜப்பானில் விபத்துகளை தவிர்க்க பல்வேறு தொழில்நுட்பங்கள், வழிமுறைகளை கையில் வைத்து உள்ளார்கள்.

ஏடிஎஸ் மற்றும் ஈடிசிஎஸ்: மேம்பட்ட சிக்னல் அமைப்புகள் மூலமாகவும், ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலமாகவும், ரயிலின் நகர்வுகள், வேகம் போன்றவற்றை கண்காணித்து ரயில் ஓட்டுநர்கள் மற்றும் டிராபிக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ரயில் டிராபிக் மேலாண்மை: இந்த அமைப்பின் மூலமாக 2 ரயில்களுக்கு இடையேயான பாதுகாப்பான தூரம் கண்காணிக்கப்படுகிறது. நவீன சூப்பர் கம்ப்யூட்டர்கள் மூலமாக ரயில்களின் நேரம், ரயில்கள் செல்லும் பாதை, ரயில்கள் மோதிக்கொள்வதை தவிர்ப்பதற்காக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
ரயில் பாதுகாப்பு அமைப்பு: ஜப்பானில் தானியங்கி ரயில் நிறுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இது அவசர காலத்தில் தானியங்கி முறையில் வேகத்தை கட்டுப்படுத்துவதுடன், பிரேக்கை பயன்படுத்தும். இந்த தானியங்கி ரயில் நிறுத்த கட்டுப்பாட்டு அமைப்பு ஆபத்தான சமயத்தில் சிக்னலை கடந்துசெல்லும்போது தானாக ரயிலை நிறுத்திவிடும்.

பாதுகாப்பு பயிற்சி: ரயில்வே துறையில் பாதுகாப்புக்கு ஜப்பான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ரயில் ஓட்டுநர்கள் முதல் ரயில்வே ஊழியர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு வகையான நெருக்கடியான தருணங்களில் சிக்கல்களை கையாள்வது பற்றி பயிற்சியளிப்பதுடன் அவசர நிலைக்கு பணியாளர்களை தயார்படுத்தி வருகிறது ஜப்பான்.
பராமரிப்பு மற்றும் ஆய்வு: ரயில்கள், தண்டவாளங்களில் தொழில்நுட்ப கோளாறுகள், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் நிகழாமல் இருக்க தொடர் பராமரிப்பு பணிகளும், ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டமைப்பு: தரமான, திடமான ரயில் கட்டமைப்புகளின் மூலம் ரயில் விபத்துகளை ஜப்பான் தவிர்க்கிறது. பராமரிக்கப்பட்ட ரயில் தடங்கள், திடமான ரயில் பாலங்கள், சுரங்கங்கள், உயர்தரமான உள்கட்டமைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்துகிறது ஜப்பான். ரயில் தடங்களில் வளைவுகள், சாய்வான பகுதிகள், வேக கட்டுப்பாடு போன்றவற்றை கருத்தில்கொண்டு திட்டங்களை வகுக்கிறது ஜப்பான்
பயணிகளுக்கு விழிப்புணர்வு: ரயில் பாதுகாப்பை பணியாளர்களுக்கு மட்டுமின்றி பயணிகளுக்கும் ஜப்பான் போதிக்கிறது. ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பலகைகள், பாதுகாப்பு அறிவிப்புகள், அவசர காலத்தில் வழிகாட்டும் பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன,
இதேபோல் உலகின் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட நாடான அமெரிக்காவும் ரயில் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு இருக்கிறது.
பாசிட்டிவ் ரயில் கண்டிரோல்: பிடிசி எனப்படும் இந்த அமைப்பு ரயில்கள் மோதிக்கொள்வது, வேகத்தால் தடம் புரள்வது, அங்கீகரிக்கப்படாத ரயில்கள் நுழைவது தவறான இடங்களில் இருக்கும் ஸ்விட்சுகள் மூலம் இயக்கப்படும் ரயில்கள் போன்றவற்றை தடுக்கிறது. ஜிபிஎஸ் மூலம், வைபை மூலம் ரயில் இயக்கத்தை கண்காணித்து கட்டுப்படுத்தும் இந்த அமைப்பு தானாகவே பிரேக்குகளை பயன்படுத்தி, வேகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு: ஏடிசி எனப்படும் தானியங்கி ரயில் கட்டுப்பாடு, ஏடிபி எனப்படும் தானியங்கள் ரயில் பாதுகாப்பு, சிடிசி எனப்படும் மத்திய டிராபிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ரயில் வேகத்தை கட்டுப்படுத்தி, 2 ரயில்களின் இடைவெளியை அதிகரித்து மோதல்களை தவிர்க்கிறது.
பராமரிப்பு மற்றும் ஆய்வு: ரயில் தண்டவாளங்களை தொடர்ந்து ஆய்வு செய்து அதில் உள்ள குறைபாடுகள் களையப்படுகிறது. தண்டவாளங்கள், ஸ்விட்சுகள், சிக்னல்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை கையாள தனி பராமரிப்பு குழு இருக்கிறது.
தகவல்தொடர்பு அமைப்பு: ரேடியா அல்லது இதர தகவல் தொடர்புகள் மூலமாக தண்டவாளங்களின் நிலை, சிக்னல்கள் அல்லது இதர பேரிடர்கள் தொடர்பாக ஒரு ரயிலில் இருந்து பிற ரயில்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பயிற்சியும் கல்வியும்: ரயில்வே ஓட்டுநர்கள், ரயில்வே பொறியாளர்கள், நடத்துநர்கள், பராமரிப்பு அலுவலர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கிறார்கள். பாதுகாப்பு நடைமுறைகள், அவசரகால நடைமுறைகள், கருவிகளை இயக்குவதற்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
பாதுகாப்பு விதிமுறைகள்: ஃபெடரல் ரயில் பாதை மேலாண்மையகம் (FRA) அமெரிக்காவில் ரயில் பாதுகாப்பை மேற்பார்வையிடுகிறது. ரயில் தண்டவாளங்கள், கருவிகள், இயக்க முறை, பணியாளர் தகுதிகளை கண்காணிப்பதுடன், ஆய்வுகள், தணிக்கைகள் மற்றும் விசாரணையை இந்த அமைப்பு மேற்கொள்ளும்.
விசாரணை: அமெரிக்காவில் ரயில் விபத்து ஏற்பட்டால் அதுபற்றி விசாரித்து தகவல் தெரிவிக்கவும் தனி முறை கையாளப்படுகிறது. இதற்கான குழு ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து பாதுகாப்பு மேம்பாடுகள் தேவையா என்பதை பற்றி விசாரிக்கும். இதை விசாரிக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திடம் உள்ளது. இந்த அமைப்பு ரயில், சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
அணு அட்டாக் நடக்கும்.. பல லட்சம் கோடி பெட்டிங்.. அணு பேரழிவு வரலாம்.. உலக சுகாதார மையம் வார்னிங் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications