விரக்தி.. நேரடியாக அவரிடமே முறையிட்ட குஷ்பு.. எல்லாத்தையும் மாற்றிய "ஒரு" போன் கால்.. செம திருப்பம்!
: சீட் கிடைக்குமா.. கிடைக்காதா என்று கடைசி நொடி வரை பரபரப்பு நிலவிய நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்புவிற்கு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட சீட் கிடைக்காது என்ற நிலைக்கு சென்று.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட் காரணமாக குஷ்புவிற்கு இந்த சீட் கொடுக்கப்பட்டுள்ளது.. அப்படி என்ன நடந்தது?
திமுக, காங்கிரசில் இருந்த வரை நடிகை குஷ்புவிற்கு நிறைய பொறுப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், கட்சிக்காக உழைத்தாலும் அவருக்கு தேர்தலில் மட்டும் வாய்ப்பே வழங்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த குஷ்பு.. கசப்புகளை, மோதல்களை மறந்து நேராக பாஜகவில் சென்று சேர்ந்தார். பாஜகவில் இவர் சேர்ந்த முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் அவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது.

மரியாதை
இந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பாஜகவில் சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் குஷ்பு உறுதியாக இருந்தார். இதற்கான அறிகுறிகளும் தெரிந்தது. இதற்காக அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை ஸ்கெட்ச் போட்டு வைத்து இருந்தார். அதோடு அந்த தொகுதியில் மிக கடுமையான தேர்தல் பணிகளை செய்து வந்தார். தனியாக கேரவன், தற்காலிக பிரசார மையம் அமைத்து தேர்தல் பணிகளை செய்தார்.

தேர்தல் பணிகள்
ஆனால் கஷ்டப்பட்டு இவ்வளவு தேர்தல் பணிகளை செய்தும் கூட.. குஷ்புவிற்கு சேப்பாக்கம் தொகுதி கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி பாமகவிற்கு சென்றுவிட்டது. இதனால் குஷ்பு ஒரு நொடி மொத்தமாக உடைந்த போய்விட்டார். இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்த்தோமே.. இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தி இருக்கிறார் குஷ்பு.

குஷ்பு வருத்தம்
சேப்பாக்கம் தொகுதியும் கிடைக்காத காரணத்தால்.. கண்டிப்பாக நமக்கு இங்கேயும் புறக்கணிப்புதான் மிஞ்சுமோ என்று குஷ்பு கோபம் அடைந்துள்ளார். தனது வருத்தத்தை மறைமுகமாக சில பேட்டிகளிலும் கூட தெரிவித்தார். பாஜக நிர்வாகிகள் சிலரிடம் பேசிய குஷ்பு.. சேப்பாக்கம் தொகுதிக்கு அவ்வளவு செய்தேன்.. நான்தான பாஜகவில் முதல் ஆளாக தேர்தல் பணிகளை தொடங்கினேன்.

வாய்ப்பு இல்லை
ஆனால் எனக்கே இப்போது வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போம்.. வேறு எங்காவது சீட் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று தொடர்ந்து மேலிடத்தில் பேசி பார்த்துள்ளார். பாஜகவில் இணைந்ததில் இருந்தே அதன் தேசிய தலைவர் ஜெபி நட்டாவிற்கும் குஷ்புவிற்கும் நல்ல நட்பு இருக்கிறது . இந்த நிலையில் டெல்லியில் இருக்கும் சில தலைவர்களிடம் நேரடியாகவே இது குறித்து பேசி உள்ளார்.

பேசினார்
இதற்காக சில முக்கிய தலைவர்களிடம் பல மணி நேரம் போனில் பேசி உள்ளார். அதில் ஒரு போன் கால்தான் குஷ்புவிற்கு சாதகமாக சென்றுள்ளது . எனக்கான முக்கியத்துவம் பாஜகவில் கிடைக்கும், மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும் என்று உறுதி அளித்த காரணத்தால்தான் பாஜகவிற்கு வந்தேன் .. இங்கும் ஏமாற்றினால் என்ன அர்த்தம் என்று குஷ்பு வருந்தி இருக்கிறார்.

ஆதரவு
இவருக்கு மக்கள் ஆதரவும் இருப்பதை பார்த்த பின்பே பாஜக கண்டிப்பாக சீட் ஒதுக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இவரை பற்றி தமிழக பாஜகவும் குட் ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளது. நம்பி களமிறக்கலாம் என்று பாசிட்டிவ் ரிப்போர்ட் ஒன்றை அளித்துள்ளது. இதை பார்த்து டெல்லி தலைமை நம்பிக்கை பெற்ற பின்பே ஆயிரம் விளக்கு தொகுதியை குஷ்புவிற்காக டிக் அடித்துள்ளனர்.

கு. க செல்வம்
ஆனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் குக செல்வம்தான் போட்டியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் கு. க செல்வதற்கு மத்தியில் உயர்ந்த பதவி ஒன்றை கொடுக்க போவதாகவும், அதிக வாய்ஸ் உள்ள பொறுப்பு ஒன்றை வழங்க;போவதாகவும் பாஜக உறுதி அளித்துள்ளது. இவரை சமாதானம் செய்த நிலையில் குஷ்புவிற்கு கடைசியில் ஆயிரம் விளக்கு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது... ஆனால் கு.க செல்வம் இன்னும் சமாதானம் அடையவில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications