மணிரத்னம் செய்த பெரிய தவறு.. பொன்னியின் செல்வன் 2 எதிர்பார்ப்பை ஏமாற்றியது எங்கே? 7 விஷயங்கள்!
சென்னை: பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்தவர்களுக்கு மணிரத்னம் மீது சில ஏமாற்றங்கள் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். அதில் கவனிக்கப்பட வேண்டியது 2 அம்சங்களாகும்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு உட்பட பலபல நட்சத்திரங்களின் நடிப்பில் 2023, ஏப்ரல் 28ம் தேதி, இன்று வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் 2ம் பாகம்.

கடலில் அருண்மொழி வர்மனும், வந்தியத்தேவனும் வீழ்ந்ததோடு முதல் பாதி முற்றுபெற்ற நிலையில், அதிலிருந்து 2வது பாகம் ஆரம்பிக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே மணிரத்னம் ட்விஸ்ட் வைத்திருந்தார்.
1) காதல் காட்சிகள்: ஆம்.. ஆதித்த கரிகாலனின் மற்றும் நந்தினியின் இளம் வயது காதல் காட்சிகளோடுதான் படம் விரியத் தொடங்குகிறது. காதல் மற்றும் பிரிவு அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நந்தினி, சுந்தரச்சோழரின் மகளாக இருக்குமோ என்ற ஐயம் ரசிகர்களுக்கு இருக்கும் என்பதால் இந்த காதல் காட்சிகள் மீது ஒட்டுதல் இல்லை என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் காட்சியமைப்பும், பிரிவு துயரும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதால், நந்தினி மீது ரசிகர்களுக்கே இரக்கமும், அவர் பழிவாங்குவதில் தப்பேயில்லை என்ற எண்ணத்தையும் வரவழைத்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.

2) காதல் ஓவியம்: இதேபோல, குந்தவையும், வந்தியத்தேவனும் ஒரு குட்டி தீவு மாதிரி பகுதியில் சந்திக்கும் காட்சியும் கலா ரசனையோடு, காதல் சுவையை பிழிந்து ஊற்றப்பட்டு எடுக்கப்பட்ட காட்சி. கண்கள் கட்டப்பட்ட நிலையில், வந்தியத்தேவன், மெல்ல மெல்ல குந்தவை கரத்தை பற்றி முன்னேறி தோள்பட்டை வரைச் சென்று இருவரும் நேர் எதிரில், வெகு நெருக்கத்தில் நின்றபடி பேசும் காதல் மொழிகள், மணிரத்னத்தின் ஸ்பெஷல் டச். இந்த மனுஷனுக்கு மட்டும், இன்னும் எத்தனை வருஷம்தான் காதல் ஹார்மோன் இப்படி கன்னா பின்னாவென சுரக்குமோ என்று ஏக்கம் கொள்ள வைக்கும் கவி மொழி அது.
3) மணிரத்னம் டச்: காதல் என்று வந்துவிட்டாலே என்றும் 16 வயது பையன்தான் மணிரத்னம் என்பதற்கு மற்றொரு சான்று, சுந்தரச்சோழர், ஊமை ராணி காட்சி. சுந்தரச்சோழர் மடியில் ஊமை ராணியை கிடத்தி பார்க்கும் தருணம், அதற்கு முன்பாக அம்புகள் இருபுறமும் செல்வதை காட்சிப்படுத்திய விதம் என காதலுக்கு கட்டியம் கூறி அழைக்கும் காட்சியமைப்பில் அதுவும் இடம் பிடித்தது.

4) நந்தினி காதல்: இது மட்டுமா.. 2வது பாகத்தின் நாயக-நாயகிகளான விக்ரம்-ஐஸ்வர்யா ராய் நேரில் சந்திக்கும் காட்சியிலும், காதல் ரசம் சொட்டியது. மீண்டும் ஒரு பிரிவு துயர் ஐஸ்வர்யா ராயின் அலறல் சத்தத்தில் எதிரொலித்தது. இப்படி மணிரத்னத்தின் சிக்னேச்சர் இந்த படத்திலும் தொடர்ந்தாலும் பொன்னியின் செல்வன் பார்க்கப்போவது காதலுக்காக மட்டுமே அல்லவே.
5) சொதப்பியது: வீரம் எங்கே.. பராக்கிரமம் எங்கே.. போர் கள காட்சியமைப்பு எங்கே.. எங்கே எனத் தேட வைத்துவிட்டது படம். தமிழனின் காதல் காட்சிப்படுத்தப்பட்டது, வீரம் போதிய அளவுக்கு காட்சிப்படுத்தப்படவில்லை. இதுதான் அந்த 2 மேஜர் மிஸ்சிங் பாயிண்ட்ஸ். பொன்னியின் செல்வன் இத்தனை தூரம் புகழடைய காரணமே அதன் கூஸ்பம்ப் எழுத்தாக்கம்தான். அப்படியான காட்சியை எழுத இயக்குநர், யாரையும் தேட வேண்டியதில்லை, அதை அமரர் கல்கியே திறம்பட செய்துவிட்டார். ஆனால் அதை காட்சியாக கொண்டுவருவதில்தான் இயக்குநருக்கு எந்த அக்கறையும் இல்லை.
6) போர்க்களம்: ராஷ்டிரகூடர்களுடனான இறுதிப்போர் இந்த சொதப்பலுக்கு ஒரு சான்று. மொத்தமே கிராமத்து கிரிக்கெட் கிரவுண்ட் மாதிரியான ஒரு இடத்தில் சோழர் "படையும்," ராஷ்டிரகூடர் "படையும்" அடங்கிவிட்டது. இந்த போருக்கு இளவரசரே நேரில் வரனுமா என்ன. அப்படியே வந்தாலும் அவரா இப்படி கத்தியை சுற்றிக்கொண்டிருப்பார். அப்படியே சுற்றினாலும் இப்படி அப்பப்போ அடியா வாங்குவார். இது ராஜராஜ சோழனின் பராக்கிரமத்திற்கே சவால் விடுவதை போல உள்ளதே.
7) அருண்மொழிவர்மன்: முதல் பாகத்தில் அருண்மொழிவர்மன் மீது அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, அவரது பெயரிலான படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாமல் நந்தினி காதலே பிரதானப்படுத்தப்பட்டதால் பராக்கிரமம் பெரிதும் மிஸ். காட்சிகள் அப்படியே நகருகின்றவனே தவிர, சோழ இளவரசர்களுக்கான கூஸ்பம்ப் வசனமோ, காட்சியோ இல்லை. பாண்டிய இளவரசனையும் இவ்வளவு பரிதாபமாகவா காட்டுவது? ஆறுதலான விஷயம், இடைவேளை காட்சியின்போது கொஞ்ச நேரம், காட்சியமைப்பு அருண்மொழியை சுற்றி வருவதுதான். யானை காதில் அருண்மொழிவர்மன் பேசியதும், அதற்கு அடுத்த காட்சியும், தூங்குபவர்களையும் விசிலடிக்க வைக்கும் ரகம். இப்படி படத்தில் நான்கு காட்சிகளையாவது வைத்திருக்கலாம். அதற்கான எல்லா நியாயமும், வசதியும், வாய்ப்பும், பொன்னியின் செல்வன் மூலக் கதையிலேயே உள்ளது. ஆனால் காதல் கோட்டுக்குள் அடங்கிவிட்டது, மதம் கொண்ட யானையாக வர வேண்டியிருந்த, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2, என்பது ஏமாற்றமே.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications