உங்க கண்களுக்கு சேலஞ்ச்! படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன? 10 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் உள்ளன என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க முடியுமா?. உங்கள் கண்களுக்கு சேலஞ்ச் கொடுக்கும் வகையில் இந்த படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் உள்ளன? அவை என்னென்ன என்று கண்டுபிடிங்க பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. கண்கட்டி வித்தை என்றும் இந்த படங்கள் அழைக்கப்படுகிறது. பார்த்ததும் நம் கண்களுக்கு தெரியாத வகையில் இந்த படங்களில் விடையானது மறைந்து இருக்கும்.

optical illusion offbeat trend

இதனால்தான் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மூலமாக ஒருவரது கவனிப்புத்திறனானது அதிகரிக்கிறது. பார்ப்பவர்களின் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும். அந்த வகையில் இன்று ஒரு இல்யூஷன் படமானது பலரையும் குழப்பி வருகிறது. பார்ப்பதற்கு ஈசியான படம் என்று தோன்றினாலும், விடை என்ன என்று சொல்லும் போது திணறிவிடுகிறார்கள்.

இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை உயிரினங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால் ஆகும். என்ன போட்டிக்கு தயாரா? உங்களுக்கு 10 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் கண்டுபிடிங்க பார்க்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1..2 .. 3.. .. 10. ஓகே டைம் ஓவர். படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்று கண்டுபிடிக்க முடிந்ததா?

கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் படத்தில் உள்ள உயிரினங்களை கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் அதி புத்திசாலி தான். ஒருசிலர் 5 விலங்குகள், 6 விலங்குகள் என்று சொன்னால் அது விடை கிடையாது. தவறு ஆகும். அப்போது எத்தனை விலங்குகள் என்று நீங்கள் கேட்கலாம். படத்தில் மொத்தம் 9 விலங்குகள் உள்ளன. இது தான் விடையாகும்.

ஆனால் இந்த 9 விலங்குகள் என்னென்ன என்று கண்டுபிடிக்க முடிந்ததா?.. 9 விலங்குகளும் என்னவென்று கண்டுபிடித்து இருந்தால் நீங்க ஜீனியஸ் தான். ஆனால் தெரியாதவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். படத்தில், கரடி, மாடு, ஓநாய், பூனை, முயல், பறவை, வண்ணத்துப்பூச்சி, நத்தை, வீசல் (மர நாய் வகை) ஆகிய 9 உயிரினங்கள் உள்ளன. இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+