படத்தில் எத்தனை பந்துகள் உள்ளன? 99% பேர் விடையை தப்பா தான் சொல்லியிருக்காங்க.. கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பல வண்ண நிறத்தில் பிரமிடு அமைப்பில் பந்துகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் மொத்தம் எத்தனை பந்துகள் இருக்கின்றன? என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். 10 செகண்ட் டைம். அதற்குள் விடையை கண்டுபிடிக்கவும். 100-க்கு 99 பேர் தவறான பதிலை தான் சொல்லியிருக்கிறார்கள். உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
மூளையை கசக்கி பிழிய செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. தினம் தினம் புதிது புதிதாக இணையத்தில் பரவி வரும் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள், பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் இந்த இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடித்து தங்கள் திறனை சோதித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும். ஒருமுறை பார்க்கும் போதே விடையை கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அதனை அனுப்பி வைத்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கிறார்கள்.
இப்படி இணையத்தில் வட்டமடிக்கும் ஒரு ஆப்டிகல் புகைப்படத்தை தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம். இந்த இல்யூஷன் படத்தில் பல வண்ண நிறத்திலான பந்துகள் பிரமிடு அமைப்பில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 அடுக்குகளாக பந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதில் கேள்வி என்னவென்றால், இந்த படத்தில் எத்தனை பந்துகள் இருக்கின்றன என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
ரொம்பவே ஈஸியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கான விடையை 100 இல் 99 பேர் தவறாக தான் சொல்லியிருக்கிறார்கள். எனவே குறிப்பிட்ட 10 செகண்ட் டைமுக்குள் உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2... 3.. 4.. .. 10. ஓகே டைம் ஓவர். சரியான விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

விடை 23.. விடை 15 என சொன்னால் அது தவறானது. ஒரு சிலர் விடை 30 என்று சொல்வது புரிகிறது. ஆனால் அந்த விடையும் தவறு தான். ஏன் பெரும்பாலானோர் இந்த படத்தில் மொத்தம் 30 பந்துகள் இருக்கின்றன என்று தான் சொல்லுவார்கள். ஆனால் அது தவறான விடை ஆகும். கணிதத்தில் புலியாக இருப்பவர்கள் எல்லாரும் இந்த விடையை தான் சொல்லியிருப்பார்கள்.
ஆனால் அங்கே தான் ஒரு ட்விஸ்ட். ஏனென்றால் எப்போதும் போல இதனை கணக்காக பார்க்காமல், ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படமாக பார்த்தோம் என்றால் விடையை கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால், இந்த படத்தை கணக்கு கோணத்தில் பார்க்கக் கூடாது. கேள்வியை புரிந்துகொள்வதில் தான் விடை இருக்கின்றது. இப்போது பலருக்கும் விடை என்னவென்று தெரிந்து இருக்கும் என நம்புகிறோம்.
அதாவது இந்த படத்திற்கான விடை 16 என்பதே சரி ஆகும். அது எப்படி என்று நீங்கள் புருவத்தை உயர்த்தி பார்ப்பது புரிகிறது. அதாவது கேள்வியில் என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை பார்த்தால் புரியும். அதாவது படத்தில் எத்தனை பந்துகள் உள்ளன? என்று தான் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பிரமிடு அமைப்பில் எத்தனை பந்துகள் உள்ளன என்று கேட்கவில்லை.
எனவே படத்தில் உள்ளபடி பார்க்கும் போது நம் கண்களுக்கு 16 பந்துகள் மட்டும் தான் தெளிவாக தெரிகிறது. பிரமிடு அமைப்பில் உள்ளதால் நம் கண்களுக்கு தெரியாத பந்துகளையும் சேர்த்து எண்ணிக்கொண்டிருந்து ஏமாந்து போயிருக்கிறார்கள். அதாவது நூற்றில் 99 சதவீதம் பேர் தவறாக தான் சொல்லியிருக்கிறார்கள். எனவே நீங்களும் தவறாக சொல்லிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டாம். அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே இதற்கான விடையை கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்பவர்கள் ஜீனியஸ் தான். நீங்கள் அபார கவனிப்பு திறன் பெற்றவர்கள். உங்களை அவ்வளவு சீக்கிரம் யாராலையும் ஏமாற்ற முடியாது. நீங்க கில்லி தான்.












Click it and Unblock the Notifications