டிடிவி தினகரனுக்கு 12.26 கோடி சொத்து.... சீமானுக்கு ஆண்டு வருமானமே ரூ.1000தானாம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ரூ. 12.26 கோடி சொத்துக்கள் உள்ளன, நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சீமானுக்கு ஆண்டு வருமானமே 1000 ரூபாய்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அதில் தனது சொத்து மதிப்பை பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி டிடிவி தினகரன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 12.26 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சீமான் தனது வேட்பு மனுவில் தமக்கு அசையும் சொத்து ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்
ஆர்கே நகர் இடைத்தேர்தலை தொடர்ந்து 2-வது முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தற்போது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல்
திங்கட்க்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் தினகரனுக்கு 12.26 கோடி சொத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசையும் அசையா சொத்துக்கள்
ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அதில் தனது சொத்து மதிப்பை பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி டிடிவி தினகரன் கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு 11 லட்சத்து 45 ஆயிரம் அளவுக்கு அசையும் சொத்துக்களும், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளது குறிப்பிட்டிருந்தார்.

சொத்துக்கள் எவ்வளவு
டிடிவி தினகரன் தனது மனைவி பெயரில் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

சீமானின் சொத்து மதிப்பு
நாம் தமிழர் கட்சியின் ஓருங்கிணைப்பாளர் சீமான் தனது வேட்பு மனுவில் தமக்கு அசையும் சொத்து ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். கூடவே தன் மனைவிக்கு அசையும் சொத்து ரூ.63,25,031 மற்றும் அசையா சொத்து ரூ.25,30,000 உள்ளதாகம் அவர் குறிப்பிட்டிருக்கார். தனக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.65,500 மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சென்ற 2019-20 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications