அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது பழைய நிலைக்கு திரும்புவார்? இருதய நிபுணர் சொல்லும் தகவல்!
சென்னை: இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வளவு நாட்களில் செந்தில் பாலாஜி இயல்பு நிலைக்குத் திரும்புவார் என இருதய நோய் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடுகளில் கடந்த 13ஆம் தேதி காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவர் நெஞ்சுவலியால் கதறித் துடித்தார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவரது ரத்தக்குழாய்களில் 4 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
அதைத்தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று கடந்த 15-ந் தேதி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையில் டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருந்தது. இந்த டாக்டர்கள் குழு செந்தில் பாலாஜிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் ஐந்து மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. 5 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அறுவை சிகிச்சையில் அமைச்சருக்கு 4 பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற பைபாஸ் சர்ஜரி பற்றி இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம் கூறுகையில், "பைபாஸ் அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் வரை நடைபெறும். இதில், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் வரை தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பார். பைபாஸ் சிகிச்சை பெற்றவர்களை 7 நாட்களுக்கு பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்வார்கள்.
பைபாஸ் சர்ஜரி செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வில் இருப்பது அவசியம். இயல்பு நிலைமைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகலாம். பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளை பொறுத்து சற்று வேறுபடலாம். இருப்பினும் பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளைப் பொறுத்து சற்று வேறுபடலாம்.
வழக்கமாக இருதயம் செயல்பாட்டில் இருக்கும்போதே 'ஆன் பம்ப்' அறுவை சிகிச்சை நடைபெறும். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் 80% இயல்பு நிலைக்குத் திரும்பவே 1 மாதம் ஆகும். பழைய நிலைக்குத் திரும்ப 3 மாதங்கள் ஆகலாம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications