‛‛12 நாட்கள்’’.. 2024ல் ரேஷன் கடைகளுக்கான பொது விடுமுறை நாள் லிஸ்ட் இதோ! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2024ம் ஆண்டில் 12 நாட்கள் பொதுவிடுமுறை தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் 24 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த 24 பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை என்பது வழங்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்தினாலும் கூட ரேஷன் கடைகளுக்கு ஆண்டுதோறும் தனியே பொது விடுமுறை தினம் என்பது அறிவிக்கப்படும். அதன்படி 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொதுவிடுமுறை விடப்படும் நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் வெளியிட்டுள்ளார். அதில், பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் உள்பட 12 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அதன்படி பொங்கல் (ஜனவரி15 -திங்கட்கிழமை), தைப்பூசம் (ஜனவரி 25 -வியாழக்கிழமை), குடியரசு தினம் (ஜனவரி 26 -வெள்ளிக்கிழமை), ரம்ஜான் (ஏப்ரல் 11 -வியாழக்கிழமை), தமிழ் புத்தாண்டு/டாக்டர் பிஆர் அம்பேத்கர் பிறந்த தினம் (ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை) ஆகியவை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மே தினம் (மே 1 -புதன்கிழமை), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15 -வியாழக்கிழமை), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 7 -சனிக்கிழமை), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2 - புதன் கிழமை), விஜயதசமி (அக்டோபர் 12 -சனிக்கிழமை), தீபாவளி (அக்டோபர் 31 -வியாழக்கிழமை), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25 -புதன்கிழமை) என மொத்தம் 12 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications