ஒரு வாரத்தில் பல மாவட்டங்களில் இரு மடங்கு.. தமிழகத்தில் ஒரளவு கொரோனா கட்டுக்குள் உள்ள மாவட்டங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரம் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 59,377 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, இந்த ஞாயிற்றுக்கிழமை 82,275 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இந்த ஒரு வாரத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை, வேலூர், தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, தருமபுரி, சிவகங்கை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இரு மடங்கு என்கிற அளவிற்கு அதிகரித்துள்ளது.

how many districts controlled covid cases in tamilnadu with below 200

இதில் மதுரை, ராமநாதபுரம், தேனி, சேலம், வேலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. அதேநேரம் திருப்பூர், நாமக்கல், கரூர், அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஒரளவு கட்டுக்குள் உள்ளன.

அதேநேரம் சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 41172 ஆக இருந்த நிலையில். இந்த வாரம் 53,762
ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேருக்கு சென்னையில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டில் கடந்த வாரம் 3745 ஆக இருந்த நிலையில் இந்த வாரம் 5051 ஆக உயர்ந்துள்ளது. அதாவது செங்கல்பட்டில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் 1300 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழத்தில் பெரும்பாலான மாவட்டங்களில கொரோனா பாதிப்பு 50 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 21ம் தேதி நிலவரத்தையும் இன்றைய (28ம்தேதி) நிலவரத்தையும் இப்போது பார்ப்போம். கடந்த வார நிலவரம் அடைப்புக்குறிக்குள் உள்ளது.

  • அரியலூர் 461 (420)
  • செங்கல்பட்டு 5051 (3745)
  • சென்னை 53,762 (41172)
  • கோவை 460 (268)
  • கடலூர் 982 (765)
  • தர்மபுரி 69 (35)
  • திண்டுக்கல் 370 (305)
  • ஈரோடு 124 (85)
  • கள்ளக்குறிச்சி 707 (387)
  • காஞ்சிபுரம் 1,791 ( 1159)
  • கன்னியாகுமரி 328 (168)
  • கரூர் 136 (115)
  • கிருஷ்ணகிரி 110 ( 63 )
  • மதுரை 1,995 ( 705 )
  • நாகப்பட்டினம் 250 ( 202)
  • நாமக்கல் 97 ( 94)
  • நீலகிரி 71 (29)
  • பெரம்பலூர் 162 (150)
  • புதுக்கோட்டை 167 ( 70)
  • ராமநாதபுரம் 742 (299)
  • ராணிப்பேட்டை 730 (470)
  • சேலம் 710 ( 335)
  • சிவகங்கை 168 (75)
  • தென்காசி 332 (241)
  • தஞ்சாவூர் 420 ( 272)
  • தேனி 200 (575)
  • திருப்பத்தூர் 138 (68)
  • திருவள்ளூர் 3,524 (2,534)
  • திருவண்ணாமலை 1,767 ( 1,060)
  • திருவாரூர் 428 ( 218)
  • தூத்துக்குடி 866 (577)
  • திருநெல்வேலி 744 (640)
  • திருப்பூர் 150 (123)
  • திருச்சி 546 (266)
  • வேலூர் 1,095 (477)
  • விழுப்புரம் 814 (581)
  • விருதுநகர் 363 (203)
  • விமான நிலைய கண்காணிப்பில்: 361 ( 262)

(வெளிநாடு)

  • விமான நிலைய கண்காணிப்பில் 306 (138)

(உள்நாடு)

  • ரயில் நிலைய கண்காணிப்பில்: 403 (401)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+