ஏப்ரலில் 16 நாள் வங்கிகளுக்கு விடுமுறை! தமிழ்நாட்டில் எந்தெந்த நாள் விடுப்பு? நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 30 நாட்கள் உள்ளன. இதில் 16 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அந்த வகையில் எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது? தமிழ்நாட்டில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது? என்பது பற்றிய முழு விபரம் வருமாறு:
நம் நாட்டில் ஒரு நிதி ஆண்டு என்பது ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து மார்ச் 31ம் வரை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 நிதியாண்டு என்பது நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய நிதியாண்டு என்பது தொடங்குகிறது.

இந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 30 நாட்கள் உள்ளன. இந்த 30 நாட்களில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான விபரத்தை ஏற்கனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வங்கி விடுமுறையை எடுத்து கொண்டால் ஒவ்வொரு மாநிலங்களுக்கு வேறுபடும். இதற்கு முக்கிய காரணம் சில மாநிலங்களில் கொண்டாடும் பண்டிகை இன்னொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படாதது தான். அந்த வகையில் நாளை மறுநாள் பிறக்கும் ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
* ஏப்ரல் 1ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படாது. 2025-26 நிதி ஆண்டின் முதல் நாளான அன்று முந்தைய நிதியாண்டின் கணக்குகளை முடிக்கும் வகையில் வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட உள்ளது.
* ஏப்ரல் 5ம் தேதி பாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாளாகும். அன்றைய தினம் தெலுங்கானவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
* ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் வங்கிகள் செயல்படாது.
* ஏப்ரல் 14 (திங்கட்கிழமை) அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மிசோரம், மத்திய பிரதேசம், பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, டெல்லி, சத்தீஸ்கர், மேகலாயா, இமாச்சல பிரதேசம், அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால் தமிழ்நாட்டுக்கும் விடுமுறை என்பது வழங்கப்பட உள்ளது.
* ஏப்ரல் 15 (செவ்வாய்க்கிழமை) பெங்காலி புத்தாண்டு, ஹிமாச்சல் டே, ஆகியவை வருகின்றன. இதனால் அசாம், மேற்கு வங்கம், அருணாச்சல் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
* ஏப்ரல் 16: போக் பிஹு வருகிறது. மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், அசாம், மிசோரம் மாநிலங்களில் விடுமுறை என்பது வழங்கப்பட உள்ளது.
* ஏப்ரல் 18 புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு, திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா,
உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், உத்தர பிரதேசம், கேரளா, நாகலாந்து, டெல்லி, கோவா, பீகார், சண்டிகர், ஜார்கண்ட், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
* ஏப்ரல் 21: கரியா பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால திரிபுராவில் வங்கிகள் இயங்காது.
* ஏப்ரல் 29 ம் தேதி ஸ்ரீபரசுராம் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. ஹிமாச்சல் பிரேதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது.
* ஏப்ரல் 30ம் தேதி கர்நாடகாவில் பசவா ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை என்பது வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனை நாள் விடுமுறை
இதில் தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் ஏப்ரல் 1, 10 , 14, 18 ஆகிய தினங்களில் விடுமுறையாகும். ஏப்ரல் 1 நிதியாண்டின் முதல் நாள் விடுமுறையாகும். ஏப்ரல் 10ல் மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14ல் தமிழ் புத்தாண்டு + அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் 18 புனித வெள்ளி உள்ளிட்ட தினங்களில் மட்டும் பொது விடுமுறையாகும். மேலும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று மொத்தம் 6நாட்கள் விடுமுறை வருகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது. சில மாநிலங்களில் அதிகபட்சம் 16 நாட்கள் வரை விடுமுறை வருகிறது. இருப்பினும் இந்த விடுமுறை நாட்களில் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications