‛லிஸ்ட்டில் 21 தொகுதிகள்’.. திமுகவிடம் காங்கிரஸ் கேட்கும் நாடாளுமன்ற தொகுதிகள் இதுதான்! திமுக ஷாக்
சென்னை: சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இருகட்சிகளின் முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை திமுகவிடம் வழங்க உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. தமிழகத்திலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளன.

மேலும் இந்த 9 தொகுதிகளை தவிர திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி (தனி), திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் (தனி), தென்சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட 12 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இதனால் இந்த 12 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட உள்ளது.
இப்படி காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் மொத்தம் 21 தொகுதிகளில் போட்டியிட விருப்ப பட்டியல் தயாரித்துள்ளது. இதில் 14 தொகுதிகள் வரை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 9 தொகுதிகளை திமுக வழங்கிய நிலையில் இந்த முறை கூடுதலாக 5 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க உள்ளது. இந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும் திமுகவை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை குறைந்த அளவில் தொகுதிகளை வழங்க முடிவு செய்யபப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 7 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம்












Click it and Unblock the Notifications