Leo FDFS படத்தயாரிப்பு நிறுவனத்தின் ஆஹா விளக்கம்.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே
சென்னை: லியோ திரைப்படம் காலை 7 மணிக்கு பதிலாக 9 மணிக்கே வெளியாகட்டும் என கூறி அதற்கு ஒரு காரணத்தையும் தயாரிப்பு நிறுவனம் கூறுவதை பார்த்தால் பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டே இருக்கிறது.

அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதாக இருந்தது. ஆனால் அது திடீரென ரத்தாகிவிட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் இருப்பதாக கண், காது ,மூக்கு வைத்து பேசப்பட்டது. ஆனால் வேறு ஒரு வழக்கில் காவல் துறை கூறிய போது லியோ இசை வெளியீட்டு விழாவை படதயாரிப்பு நிறுவனம்தான் ரத்து செய்தது என விளக்கமளித்தனர்.
இதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதில் பெண்களை தரக்குறைவாக பேசும் ஒரு கெட்ட வார்த்தை பீப் சவுண்ட் இல்லாமலேயே வெளியானது. இது பலருக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசியலுக்கு வருவதாக கூறும் விஜய் இப்படி ஒரு வார்த்தையை பேசி பெண்களை அவமதிக்கலாமா
இவருக்கு நண்டு சுண்டெல்லாம் ரசிகர்களாக உள்ள நிலையில் அதே வார்த்தையை அவர்கள் பிரயோகித்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. இதையடுத்து லோகேஷ் கனகராஜோ அந்த வார்த்தை தியேட்டரில் வராது, டிரெய்லரில் மட்டும்தான் வந்தது. விஜய் மீது எந்த தவறும் இல்லை, நான்தான் கட்டாயப்படுத்தி பேச வைத்தேன் என சப்பைக் கட்டு கட்டினார்.
ஒருவர் கூறினால் விஜய் பேசிவிடுவாரா என்றெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் டிரெய்லரிலும் அந்த வார்த்தைக்கு பீப் ஒலிக்கவிட்டார்கள். இந்த டிரெய்லரை ரோகிணி தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்தார்கள். இதற்கு விஜய் தரப்பிலிருந்து ஒரு கண்டனம் கூட வரவில்லையே என விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகளை ஒளிபரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து ஒரு சில தியேட்டர்களை தவிர்த்து மற்ற தியேட்டர்களில் லியோ படத்திற்கு நாளை காலை 9 மணி காட்சிக்கு டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் கோவையில் ஒரு தியேட்டரில் லியோ திரைப்படம் அரசு அனுமதித்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ 450 க்கு விற்பனை செய்யப்படுவதாக ஒரு வீடியோ வைரலானது. இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் திடீரென படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடியது.
மேலும் காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியிடவும் அனுமதி கேட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது என்றார். மேலும் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு ஒளிபரப்புவது குறித்து தமிழக அரசிடம் அனுமதி கேட்டு ஒளிபரப்பலாம் என பரிந்துரை செய்தார்.
இதையடுத்து நேற்றைய தினம் மாலை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்ஸை பார்க்க படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர்கள் குழுவினர் உயர்நீதிமன்ற உத்தரவு நகலுடன் சென்றார்கள். அப்போது அவரை பார்த்துவிட்டு காரில் திரும்ப நினைத்த போது அவர்களது கார் தலைமைச் செயலகத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே காலை 7 மணிக்கு ஒளிபரப்ப அரசு அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒரு விஷயத்தை கூறியுள்ளது. அதாவது லியோ திரைப்படத்தை காலை 9 மணிக்கு ஒளிபரப்புகிறோம். காலை 9 மணிக்கான புக்கிங் முடிந்துவிட்டதால் காலை 7 மணிக்கு ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். எனவே காலை 9 மணிக்கே லியோ காட்சியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதை பார்க்கும் போது பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. முன்பதிவு தொடங்கிவிட்டது என தெரிந்தும் படத்தயாரிப்பு நிறுவனம் கோர்ட் படியை மிதித்த போதே முன்பதிவு விஷயத்தில் குழப்பம் ஏற்படும் என்பதை அறிந்திருக்க வேண்டாமா, எதற்காக வழக்கு போட்டு, விபத்து நடந்து இப்படி சிறிய விஷயத்தையும் சிக்கலாக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது. மேலும் தமிழக அரசு காலை 7 மணிக்கு காட்சிக்கு மறுத்துவிட்டது. அதை குறிப்பிடாமல் தியேட்டர் அதிபர்களை காரணம் காட்டுவது முரணாக இருப்பதாகவே கூறுகிறார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications