Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தமேயில்லை.. ஸ்டாலினின் மூவ்.. ஆடிப்போன அதிர்ந்த கூட்டணிகள்.. அதுக்குமேல பாஜக.. பலே "கிங் மேக்கர்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போதைக்கு, தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டும்தான் பலமாக உள்ளதாக கருதப்படும் நிலையில், அந்த கூட்டணியிலும் ஒரு ஜெர்க் வந்துவிடும் போல தெரிகிறது.

அதிமுகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. பாஜக என்ன செய்ய போகிறதென்றே தெரியவில்லை.. பாமக, தேமுதிக கட்சிகளும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.. அதிமுகவின் தோழமை கட்சிகளும், உறுதியான பதிலை சொல்லவில்லை. சீமானை அதிமுக பக்கம் கொண்டுவரும் முயற்சிகளும் நடப்பதால், அதுபற்றியும் தெளிவாக தெரியவில்லை..

How many seats are allotted to DMK alliance parties and Will MK Stalin become a King Maker

திமுக கூட்டணி: ஆக, திமுக கூட்டணி மட்டுமே உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. ஏற்கனவே இருந்த கட்சிகளுடன், மேலும் சில கட்சிகள் இணையலாம் என்றார்கள்.. குறிப்பாக, பாமக, மநீம போன்ற கட்சிகள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாக தெரிகிறது.

அந்தவகையில் கமலுக்கு, 1 சீட் வழங்க முடிவாகி இருப்பதாக தெரிகிறது. ஆனால், 2 சீட்டையாவது வாங்கிவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம் மக்கள் நீதி மய்ய தலைவர்.. அதுவும் கோவை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்..

கம்யூனிஸ்ட்கள்: ஆனால், கோவை தொகுதி ஏற்கனவே கம்யூனிஸ்ட்களின் வசம் இருப்பதால், இந்த தொகுதியை விட்டுத்தர அந்த கட்சியினர் மறுக்கிறார்கள்.. வேண்டுமானால், ஐஜேகே பாரிவேந்தருக்கு ஒதுக்கிய பெரம்பலூரை தருவதாக சொல்கிறதாம் திமுக மேலிடம்.. ஆனால், இதனை கமல் ஏற்கவில்லை என்பதால், இது தொடர்பான பேச்சுக்கள் தொடர்கிறதாம்.

அதேபோல, விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள், இந்த முறை கூடுதல் சீட்களை கேட்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.. அதுவும் காங்கிரஸ் 15 சீட் கேட்கும் முடிவில் உள்ளது.. 15 சீட்களை கேட்டால்தான், 10 சீட்டாவது தருவார்கள் என்பதால், மேலிட காங்கிரஸ் இப்படி ஒரு பேரத்தை, திமுக தரப்பிடம் நடத்த சொன்னதாக தெரிகிறது.

கூடுதல் சீட்: அதனால்தான், "கூடுதல் சீட்களை திமுகவிடம் கேட்டு பெறுவோம்" என்று மாநில தலைவர் அழகிரியும் விடாமல் சொல்லி வருகிறார். எனினும், திமுக மேலிடம் இதுவரை, சீட், கூட்டணி பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை.

கடந்த முறை தேர்தலில் எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டை லட்டு போல தூக்கி தந்தது திமுக.. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லை. எனவே, எப்படி பார்த்தாலும், காங்கிரசுக்கு 5 அல்லது 6 சீட் மட்டுமே ஒதுக்குமாம்.. ஒருவேளை பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதானால், குறைந்தது 4 சீட்டையாவது ஒதுக்க வேண்டியிருக்கும். விசிக, மதிமுக, 2 கம்யூனிஸ்ட்கள் இந்த முறை 3 சீட்டுக்களை எதிர்பார்த்து காத்திருந்தாலும், இவர்களுக்கு தலா 1 சீட் ஒதுக்கும் முடிவில் திமுக உள்ளதாக தெரிகிறது.

கூட்டணி: இதற்கெல்லாம் காரணம், கடந்த முறை, எடுத்த எடுப்பிலேயே கூட்டணிகளுக்கு சீட் ஒதுக்கியதால்தான், கடைசி நேரத்தில் திணறிவிட்டது திமுக.. இதனால், அதிக இடத்தில் போட்டியிடவும் முடியாமல் போய்விட்டது. அதனால், இந்த முறை திமுக, தீவிர யோசனையை முன்னெடுத்துள்ளது.

திமுகவை பொறுத்தவரை, இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ளது.. ஒருவேளை, தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் மெஜாரிட்டியை பெற முடியாமல் போய்விட்டால், "கிங் மேக்கர்" அரசியலை செய்யவேண்டும் என்று நினைக்கிறாராம் ஸ்டாலின். அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டுமானால், கையில் குறைந்தது 30 எம்பி-க்களாவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். அதனால்தான், தொகுதி பங்கீடு விஷயத்தில் அவசரப்படாமல் திமுக மேலிடம் உள்ளதாக சொல்கிறார்கள்.

க்ளைமேக்ஸ்: ஆக, கூட்டணிகளை இறுதிசெய்துவிட்டு, அதற்கு பிறகுதான் பங்கீடு விஷயத்தில் உறுதியான முடிவை திமுக எடுக்கும் என தெரிகிறது. ஒருவேளை, தொகுதிகளை குறைத்துவிட்டால், கூட்டணியை விட்டு யாராவது விலகி செல்வார்களா? அல்லது திமுகவிலேயே தொடருவார்களா என்று தெரியவில்லை..

ஆனால், வரப்போகும் தேர்தலானது, தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்தி கொண்டுபோகச் செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+