பிடிவாதம் காட்டி பிரேமலதா.. தேமுதிகவிற்கு 5 சீட் ..எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?
சென்னை: அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட நிலையில், பிரேமலதாவின் தேமுதிகவிற்கு ஐந்து சீட் வழங்கப்பட்டுள்ளதை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த தொகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது..
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களையும் வரிசையாக அறிவித்து வருகிறது. திமுக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிப்பதாக அறிவித்துள்ளது.

பாஜகவை பொறுத்தவரை கூட்டணி பேச்சவார்த்தை முடிந்துவிட்டது. தொகுதி பங்கீடும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. வேட்பாளர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது என்றே சொல்லலாம். இன்னும் தொகுதி பங்கீடு மட்டுமே பாக்கி இருக்கிறது.
ஆனால் வழக்கமாக அதிமுக மட்டுமே கூட்டணியை இறுதி செய்து வேட்பாளர்களை முதல் ஆளாக அறிவிக்கும்.. இந்த முறை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. அதிமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை இன்று தான் நிறைவு செய்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
முன்னதாக பா.ம.க. 8 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அதிமுக ஒப்புக்கொண்ட நிலையில், திடீரென பாஜக கூட்டணியில் போய் பாமக இணைந்துவிட்டது.. இதனிடையே தே.மு.தி.க. 5 தொகுதிள் கேட்டது. இதற்கு அ.தி.மு.க. கொண்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், கூட்டணியை விரைந்து முடித்து அதிரடியாக வேட்பாளர்களை அதிமுக வெளியிட்டுள்ளது.. அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். வடசென்னை தொகுதியில் ராயபுரம் மனோ, தென் சென்னையில் ஜெயவர்தன்
சேலம் தொகுதியில் விக்னேஷ் போட்டியிடுகிறார்கள். பிரேமலதாவின் தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனிடையே தேமுதிக போட்டியிடும் ஐந்து தொகுதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது.
விருதுநகர்
கள்ளக்குறிச்சி
கடலூர்
திருச்சி
மத்திய சென்னை
அதிமுகவின் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்
சென்னை வடக்கு - ராயபுரம் மனோ
சென்னை தெற்கு - ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ்
ஆரணி - ஜி.வி.கஜேந்திரன்
சேலம் - விக்னேஷ்
தேனி - நாராயணசாமி
விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
நாமக்கல் - எஸ்.தனிமொழி
ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்'
கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
மதுரை: பி.சரவணன்
ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்












Click it and Unblock the Notifications