ஏதாச்சும் பார்த்து போட்டு கொடுங்கப்பா.. முடியலப்பா.. பரிதாபத்தில் தேமுதிக

சீட்களை பெறுவதில் தேமுதிக திணறி வருவதாக சொல்லப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தொகுதி ஒதுக்கீட்டில் பரிதாப நிலையில் தேமுதிக- வீடியோ

    சென்னை: இவ்வளவு சீட் எங்களுக்கு ஒதுக்கியே ஆக வேண்டும் என்று கேட்க முடியாத அளவுக்கு பலமிழந்து அடங்கிப் போய்க் கிடக்கிறது தேமுதிக.

    போனமுறை தேர்தலில் 10 சீட்டு, 12 சீட்டு என குரலை உசத்தி கேட்க முடிந்தது. இதற்கு காரணம் விஜயகாந்த் என்ற ஒரே மனிதர்தான். ஆனால் இன்றைக்கு அவரது உடல்நிலை சீர்கெட்டு கட்சி நிலைமை பாழ்பட்டு எல்லாமே தலைகீழாக உள்ளது.

    குடும்பத்தை கட்சிக்குள் இழுத்து கொண்டு வந்துவிட்டதால்தான் கட்சியே பாழாகிவிட்டது என்று தேமுதிக தொண்டர்களே பலர் வெளிப்படையாக சொன்னார்கள். அதற்கேற்ற மாதிரி குடும்பத்தாரும் கட்சியை தூக்கி நிறுத்தும் வழியில் ஒன்றும் செயல்படவில்லை.

    கெத்து காட்ட முடிவு

    கெத்து காட்ட முடிவு

    ஆனால் இதெல்லாம் தெரியாமல் தேமுதிக இன்னமும் 2011-ல் இருந்ததைபோலவே அக்குடும்பம் நினைத்துகொண்டிருப்பதாகவும், இதில் விஜயபிரபாகரனுக்கு மாநிலம், சுதீஷூக்கு டெல்லி என மிதப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் சீட் ஒதுக்கீட்டில் பழைய நெனப்புடா பேராண்டி கணக்கில் கெத்தாக கேட்கலாம் என யோசித்து வருகிறதாம்.

    தைரியம் இல்லை

    தைரியம் இல்லை

    தேமுதிகவை யார் கூட்டணியில் சேர்க்கப் போகிறார்கள் என்பதே முதலில் குழப்பமாக உள்ளது. காரணம், கட்சி உயிருடன் இருக்கிறதா என்பதே பெரும் சந்தேகமாக இருப்பதால்தான். மேலும் பிரேமலதா விஜயகாந்த்தையோ அல்லது அவரது மகனையோ கொண்டு போய் நிறுத்தி வாக்கு கேட்கும் தைரியமும் எந்தக் கட்சிக்கும் கிடையாது. இருக்கிற ஓட்டையும் அது காலி செய்து விடும் என்ற அச்சம் உள்ளது.

    மறுபக்கம் சரத்குமார்

    மறுபக்கம் சரத்குமார்

    இப்போதைய நிலையில் பாஜக மட்டுமே கூட்டணியில் சேர்க்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 2014ல் ஏற்பட்ட கூட்டணி போல வித்தியாசமான கூட்டணியை பாஜக அமைக்கும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் அதில் தேமுதிக இடம் பெறலாம். மறுபக்கம் சரத்குமார் கூட்டணிக்கு அழைத்து வருகிறார். தற்போது அவர் தேமுதிகவுடன் இணக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

    பலவீனம்

    பலவீனம்

    இந்த நிலையில் தேமுதிக கேட்கும் சீட்களை எந்தக் கட்சியும் கண்டிப்பாக உடனடியாக ஒதுக்காது என்றே தெரிகிறது. அதிலும் குறிப்பாக இது வேண்டும், அது வேண்டும் என்று டிமாண்ட் செய்யவே முடியாத அளவுக்கு பலவீனமாகத்தான் தேமுதிக இருக்கிறது.

    சிவி சண்முகம்

    சிவி சண்முகம்

    தேமுதிக கள்ளக்குறிச்சி தொகுதியை முக்கியமாக மனதில் வைத்துள்ளது. அதை ஒதுக்க வேண்டும் என்று தன்னை அணுகிய சில முக்கிய கட்சிகளிடம் அக்கட்சி கோரிக்கை வைத்துள்ளதாம். குறிப்பாக அதிமுக தரப்புக்கு இந்த கோரிக்கை போனதாம். ஆனால் இதை கேட்டு அமைச்சர் சிவி சண்முகம் கொதித்து போய்விட்டாராம். இன்னொரு பக்கம், கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் ஆனதற்கு காரணமே நான்தான், ஆனால் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏ பிரபு ஒரு பக்கம் காட்டமாக உள்ளார்.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    எனவே வரும் தேர்தலில் அதிமுக அல்லது பாஜக யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்தாலும் கள்ளக்குறிச்சியை வைத்துத்தான் பெரும் பூகம்பம் வெடிக்கும் என்ற நிலை உள்ளது. அதேபோல விஜயகாந்த் இல்லாத தேமுதிக, பேரமே பேசக் கூடாது என்ற கண்டிப்பையும் முக்கிய கட்சிகள் காட்ட ஆரம்பித்துள்ளனவாம்.

    பரிதாப நிலை

    பரிதாப நிலை

    எனவே ஏதாவது பார்த்துப் போட்டுக் கொடுங்கப்பா என்று கேட்கும் நிலையில்தான் தேமுதிக தற்போது உள்ளது என்பதே நிதர்சனம்.. இது பிரேமலதா விஜயகாந்த்துக்கோ, சுதீஷுக்கோ பிடிக்காவிட்டாலும் கூட!! ஒரு வேளை விஜயகாந்த் பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வந்தால் நிலைமை தலைகீழாக மாறக் கூடும்!!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+