ஒரு சமோசா கலோரியை கரைக்க ஒரு மணி நேரம் நடக்கணும்! சிப்ஸ் பத்தி தெரிஞ்சா மயக்கமே வருதே
சென்னை: நம் எல்லாருக்குமே ஸ்நாக்ஸ் ரொம்பவே பிடிக்கும். சமோசா, சிப்ஸ், பீட்சா என லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம். ஆனால், இந்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடும்போது, அதில் இருந்து கிடைக்கும் கலோரிக்களை எரிக்க எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் தெரியுமா? இந்த லிஸ்ட்டை பார்த்தால் நிச்சயம் உங்களுக்குத் தலை சுற்றிவிடும்!
பொதுவாகவே நம்மில் பலருக்கும் உணவுகளை விட நடுவில் சாப்பிடும் ஸ்நாக்ஸ் தான் ரொம்பவே பிடிக்கும். சாப்பாடு சாப்பிடாமல் ஸ்நாக்ஸ் மட்டுமே சாப்பிடுவோரைக் கூட நாம் பார்த்திருப்போம். சமோசா, பீட்சா, சிப்ஸ் என ஸ்நாக்ஸ்களின் லிஸ்ட் போய் கொண்டே இருக்கும். பலரும் அளவுக்கு அதிகமாக ஸ்நாக்ஸ்களை சாப்பிடுகிறார்கள்.

ஸ்நாக்ஸ்கள்
இருப்பினும், இதுபோன்ற உணவுகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது ரொம்பவே ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதிலும் இந்த காலத்தில் வாழ்க்கை முறை கடுமையாக மாறியுள்ளது. பெரும்பாலானோர் தங்கள் வேலைகளில் காலை முதல் மாலை வரை உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இந்த உணவுகளையும் சாப்பிடும்போது அது உடலுக்கு ரொம்பவே கெடுதலாக மாறிவிடுகிறது.
மருத்துவர் விளக்கம்
இதனால் மருத்துவர்கள் தினசரி உடற்பயிற்சி சொல்லச் சொல்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் வாக்கிங் செல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். ஆனால், நாம் சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் இருந்து கிடைக்கும் கலோரிக்களை எரிக்க எவ்வளவு நேரம் நாம் நடக்க வேண்டி இருக்கும் என என்றாவது நாம் யோசித்தது உண்டா? எலும்பு சிகிச்சை நிபுணரான டாக்டர். மனன் வோரா என்பவர் சில வாரங்களுக்கு முன்பு இது குறித்துப் பதிவிட்ட போஸ்ட் இப்போது டிரெண்டாகி வருகிறது.
அதில் பிரபலமாக இருக்கும் ஸ்நாக்ஸ்களை நாம் சாப்பிட்டால் அதில் இருந்து கிடைக்கும் கலோரி அளவையும், அதை எரிக்க எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதையும் அவர் பட்டியலிட்டுள்ளார். "உங்களுக்குப் பிடித்த உணவுகளின் கலோரிக்களை எரிக்க எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?" என்று தலைப்பில் இது தொடர்பாக விரிவான போஸ்ட்டை பகிர்ந்துள்ளார்.
சமோசா முதல் சோலா பூரி வரை
அதில் அவர், "ஒரு சமோசா அல்லது வடா பாவ் சுமார் 250 கலோரிகள் கொண்டது.. இதற்கு சுமார் 50 நிமிடங்கள் நடக்க வேண்டும். ஒரு துண்டு பீட்சாவில் (முழு பீட்சா இல்லை. ஒரு பீஸ் மட்டும்) சுமார் 285 கலோரிகள் உள்ளன. அதற்கு சுமார் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு சிப்ஸ் பாக்கெட்டில் சுமார் 300 கலோரிகள் உள்ளன. இதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடக்க வேண்டும்.
ஒரு குலாப் ஜாமூனில் 180 கலோரிகள் உள்ளன, அதாவது சுமார் 35 நிமிடங்கள் நடக்க வேண்டும். சோலா பூரியில் சுமார் 600 கலோரிகள் உள்ளன. இதற்கு நீங்கள் சுமார் 2 மணி நேரம் நடக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
சாப்பிடக்கூடாதா?
அப்படியானால் இந்த உணவுகளை எல்லாம் முழுமையாகத் தவிர்க்க வேண்டுமா.. அது முடியாதே என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால், ஆரோக்கியம் என்பது பிடித்த உணவுகளைத் தவிர்ப்பது அல்ல என்றும் டாக்டர் வோரா கூறுகிறார். இது தொடர்பாக அவர் மேலும், "இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடவே கூடாது என்றில்லை.. அவ்வப்போது அளவாகச் சாப்பிடுங்கள். அதேநேரம் உடற்பயிற்சியையும் விடாதீர்கள். அதுவே ஆரோக்கியமாக இருக்க ஒரு வழி" என்று பதிவிட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications