நகர்ப்புற தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் எப்படி? ரிசல்ட் எப்படி?
சென்னை: தமிழகத்தில் நடந்த விஜய் மக்கள் இயக்கம் எத்தனை இடங்களில் வென்றுள்ளது தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம்
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தை விட விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என்பதற்கு அவர்கள் பெற்ற வாக்குகளே சாட்சியாகும். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 129 இடங்களில் வென்றுள்ளார்கள். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக எத்தனை இடங்கள் என இன்னும் தெரியவில்லை.

எத்தனை இடங்கள்
ஆனால் நமக்கு கிடைத்த தகவல்களின் படி கீழ்க்கண்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வென்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், வாலாஜாபேட்டையில் 3வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ், குமாரபாளையத்தில் போட்டியிட்ட வேல்முருகன், தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 14வது வார்டில் போட்டியிட்ட வேல்மயில், பொன்னேரி 16வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கொடிக்குளம் 5வது வார்டில் போட்டியிட்ட ராஜசேகரன் ஆகிய விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.

6 பேர் வெற்றி?
கிடைத்த தகவலின் அடிப்படையில் 6 பேர் வெற்றி பெற்றதாக தெரிகிறது. மேலும் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வாங்க சென்றுள்ளார்களாம். அவர்கள் சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு பனையூரில் உள்ள விஜய் அலுவலகத்திற்கு வருகிறார்கள்.

நகர்ப்புற தேர்தல்
நகர்ப்புற தேர்தலில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை போல் மாஸ் வெற்றி இல்லாவிட்டாலும் போட்டியிட்ட பிரபல கட்சிகளை காட்டிலும் எடுத்த எடுப்பிலேயே குறைந்த அளவு வெற்றியும் சாதனைதான்! பெரிய வெற்றி பெறுவதற்கு இது அடிதளமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications