படத்தில் மொத்தம் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? வெறும் 2% பேர்தான் சரியாக விடையை சொல்லியிருக்காங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் மொத்தம் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். அதுவும் 9 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் இந்த படத்தை பார்க்கும் போது ஒரே ஒரு பெண் தான் இருப்பது போல் தோன்றும் ஆனால் உற்று பார்த்தீர்கள் என்றால் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரியும். ஓகே கண்டுபிடியுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சற்று சவால் மிக்கவை. நமது கவனிப்புத்திறன், அறிவாற்றல் ஆகியவற்றை சோதிக்க கூடிய வகையில் இருக்கும். இதன் காரணமாகவே இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. ஓய்வு நேரத்தில் நெட்டிசன்களுக்கு தீனியாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைந்துவிடுகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் பலரது மூளையை கசக்கி பிழிய செய்துள்ளது.

optical illusion offbeat trend

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். ஆனால் நிறைய பேர் இந்த படத்திற்கான சரியான விடையை கண்டுபிடிக்கவில்லை. எனவே கூடுதல் போக்கசுடன் பார்த்தால் மட்டுமே இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியும். அதுவும் 9 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.

சரி ஓகே உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2... 3.. 4.. .. 9. ஓகே டைம் ஓவர். படத்திற்கான விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். கொடுக்கப்பட்டுள்ள படத்தை முதலில் பார்க்கும் போது ஒரே ஒரு பெண் நிற்பது போன்று நம் கண்களுக்கு தெரியும். ஆனால் படத்தை இன்னும் உற்று கவனித்தால் அட ஆமா இன்னொரு பெண் இருப்பது தெரிகிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரியான கணிப்பு தான்.

ஆனால் படத்தில் 2 பெண்கள் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தால் அதவும் தவறான பதில் ஆகும். இன்னும் கொஞ்சம் கூடுதல் போக்கசுடன் பாருங்கள். படத்தில் மொத்தம் 4 பெண்கள் இருப்பது தெரியும். இதுவே படத்திற்கான சரியான விடை ஆகும். 4 பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்க கிங் தான். உங்க கவனிப்புத்திறன் அபாரமாக இருக்கிறது.

ஆனால் குழப்பமாக இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லி விடுகிறோம். முதல் பெண் எல்லாருக்கும் தெரியும். 2வது பெண் எங்கே இருக்கிறார் என்றால் முதல் பெண்ணின் வலது கன்னத்தில் கையை பார்த்தவாறு இருக்கிறார். 3வது பெண் எங்கே இருக்கிறார் என்றால், முதல் பெண்ணின் வலது கை மற்றும் இரண்டாவது பெண்ணின் முகம் இரண்டையும் சேர்த்து பார்த்தால் தெரிந்துவிடும்.

4வது பெண் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பது தான் சற்று சிரமமானது. உங்களால் முடிகிறதா என்று மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். இல்லை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். 4வது பெண் முதல் பெண்ணின் வயிற்றில் உதடு போன்ற வடிவத்தில் மேல் உதட்டை மட்டும் பாருங்கள். ஒரு பெண் படுத்து இருப்பது போன்ற முழு உருவம் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+