இனி 15 வருஷத்துக்கு இதுதான்.. திமுகவை அடியோடு மாற்றும் ஸ்டாலின்.. கருணாநிதியே செய்யாத ஒரு விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தன் நீண்டகால அரசியல் வரலாற்றில் பல ஏற்ற இறக்கங்களையும், உட்கட்சி மாற்றங்களையும் கண்ட இயக்கம். ஆனால், இப்போது சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் கடுமையான பின்னடைவை அதே திமுக சந்தித்துள்ளது.

இதையடுத்து காலத்தின் மாற்றத்திற்கும், எதிர்கால அரசியல் தேவைகளுக்கும் ஏற்ப கட்சியின் உட்கட்டமைப்பை முற்றிலுமாக சீரமைக்கும் தீவிர முயற்சியில் தற்போதைய தலைமை ஈடுபட்டுள்ளது. முந்தைய தலைவர் கலைஞர் கருணாநிதி காலகட்டத்திற்கும், தற்போதைய மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத்திற்கும் இடையே கட்சி செயல்பாடுகளில் ஒரு பெரிய தலைமுறை மாற்றமே நிகழ்ந்துள்ளது.

DMK

கடந்த கால வரலாறும் கசப்பான அனுபவங்களும்

கருணாநிதி திமுகவை வழிநடத்திய காலத்தில், உட்கட்சித் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி அறிவிக்கப்பட்டு நடைபெற்றாலும், அவை பல இடங்களில் கடுமையான உட்கட்சிப் பூசல்களுக்கு வழிவகுத்தன. குறிப்பாக, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பதவிகளைக் கைப்பற்றுவதில் நிர்வாகிகளிடையே உருவான மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் வரை சென்றன.

சில இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நிகழும் அளவிற்குச் சூழல் கைமீறிப்போனதால், கட்சியின் ஒற்றுமையைக் காக்கும் பொருட்டு உட்கட்சித் தேர்தல்களை இடைநிறுத்தி வைக்கும் கட்டாயம் அன்றைய தலைமைக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் நிர்வாகிகள் நியமன முறையிலேயே கட்சி இயங்கி வந்தது.

என்ன நடந்தாலும் பரவாயில்லை - ஸ்டாலினின் துணிச்சலான முடிவு

ஆனால், தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் தோல்வியை தொடர்ந்து.. அந்தப் பழைய தயக்கங்களையும் அச்சங்களையும் முற்றிலும் ஓரங்கட்டியுள்ளார். எது நடந்தாலும் சந்திப்போம்என்ற மிக மனநிலையுடன், உட்கட்சித் தேர்தலை ஜனநாயகப்பூர்வமாக நடத்தியே தீருவது என்பதில் அவர் பிடிவாதமாக இருக்கிறார்.

கடந்த கால வன்முறை நினைவுகளைக் காட்டி தேர்தலைத் தள்ளிப்போடுவதை விட, முறையான தேர்தலின் மூலம் உண்மையான உழைப்பாளர்களைக் கண்டறிவதே கட்சிக்கு நலம் பயக்கும் என்று அவர் நம்புகிறார்.

15 ஆண்டுகால தொலைநோக்கு திட்டம்

திமுக தலைமையின் இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் ஒரு தீர்க்கமான அரசியல் கணக்கு உள்ளது. வெறும் பெயரளவில் தேர்தலை நடத்தி பதவிகளைப் பகிர்ந்தளிப்பது அவர்களின் நோக்கமல்ல. மாறாக, அடிமட்டத்தில் உண்மையிலேயே தீவிரமாகப் பணியாற்றக்கூடிய, தொண்டர்களின் ஆதரவு பெற்ற உண்மையான களப்பணியாளர்களை அடையாளம் காண்பதே இந்தத் தேர்தலின் முதன்மை இலக்காகும்.

இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் புதிய மற்றும் சுறுசுறுப்பான நிர்வாகிகள் மூலம், அடுத்த 15 ஆண்டுகளுக்கு திமுகவை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையான, சுறுசுறுப்பான இயக்கமாகத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று தலைமை கணக்கிடுகிறது. மூத்த நிர்வாகிகளின் தேக்க நிலையை உடைத்து, புதிய இரத்தத்தைப் பாய்ச்சுவதே இதன் முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்

இந்தச் சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம், மாவட்ட அமைப்புகளில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் ஆகும். இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கொள்கை முடிவில் தலைமை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

இந்த முடிவால் தங்களின் செல்வாக்கு குறையுமோ என்ற அச்சத்தில், சேகர் பாபு போன்ற செல்வாக்குமிக்க மூத்த தலைவர்கள் அல்லது மாவட்ட நிர்வாகிகள் யாரேனும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் வேலையைப் மட்டும் பாருங்கள் என்று கண்டிப்புடன் கூறி அவர்களை ஒதுக்கி வைக்க தலைமை தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தனிநபர்களின் அதிகார விருப்பத்தை விட, கட்சியின் கட்டமைப்பும் எதிர்காலமுமே முக்கியம் என்பதில் தலைமை உறுதியாக உள்ளது.

தெளிவான இலக்குடன் முன்னேறும் திமுக

தனிநபர் செல்வாக்குகளுக்கு இடம் தராமல், மிகவும் தெளிவான நோக்கத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் திமுக தலைமை காய்களை நகர்த்தி வருகிறது. இதனால் விரைவில் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+