சின்ன மாற்றம் போதும்.. வாழ்க்கையில் மிகப்பெரிய சேமிப்பு கிடைக்கும்.. வீட்டுக்கடன் மாயமாகும் மேஜிக்!
சென்னை: வீட்டுக்கடன் எவ்வளவு தொகை கூடுதலாக செலுத்தினால், எவ்வளவு வருடங்களில் கடன் அடையும்? எவ்வளவு வட்டி சேமிப்பு கிடைக்கும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனை இப்போது பார்க்கலாம்.
வீட்டுக்கடன் வாங்கும் முன் செய்யவேண்டியது...

பெரும்பாலும், வீட்டுக்கடன் வாங்குபவர்கள், EMI தொகையினை குறைவாக வைக்க, நீண்ட கால (20-25 வருடங்கள்) கடன்களை தேர்ந்தெடுப்பார்கள். இதனால், EMI குறையுமென்றாலும், நீங்கள் செலுத்தவேண்டிய வட்டி அதிகமாகுமென்பதை மறந்துவிடாதீர்கள். ஆகையால், முடிந்த அளவிற்கு, கடன் செலுத்தும் காலத்தினை குறைவாக வைக்க முயலுங்கள்.
*உங்களால் முடிந்த அளவிற்கு அதிகமாக down-payment செலுத்துங்கள். எடுத்துக்காட்டாக, ₹50 லட்சம் கடன், 8% வட்டியில் எடுத்திருந்தால், உங்களது down-paymentல் ₹5 லட்சம் கூடுதலாக செலுத்தினால், வட்டியில் நீங்கள் ₹6 லட்சம் வரை சேமிக்கலாம்.

* வங்கி அதிகாரிகள் எவ்வளவுதான் கட்டாயப் படுத்தினாலும், அவர்களிடம் இன்சூரன்ஸ் எடுத்து விடாதீர்கள். நீங்கள் வெளியே, அதைவிட குறைவான பிரீமியம் தொகையில் அதே அளவு coverage உள்ள பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்தால், உங்களுக்குப் பின்னர், இன்சூரன்ஸ் பணம் முழுக்க உங்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
60 லட்சம் கடன் வாங்கியவர்கள் எவ்வளவு தொகை கூடுதலாக செலுத்தினால், எவ்வளவு வருடங்களில் கடன் அடையும்? எவ்வளவு வட்டி சேமிப்பு கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.
🔹கடன்: ₹60,00,000
🔹கடன் காலம்: 20 வருடங்கள்
🔹கடன் வட்டி: 8.50%
2040 வரை அதாவது 20 வருடங்கள் வரை prepayment எதுவும் செலுத்தாமல் அப்படியே கட்டினால் நீங்கள் 64 லட்சத்து 96 ஆயிரத்து 655 ரூபாய் செலுத்த வேண்டும். வட்டி சேமிப்பு சுத்தமாக இருக்காது.
வீட்டுக்கடன்:
— K. RAJESH (@rajeshkmoorthy) August 3, 2023
👉 எவ்வளவு தொகை கூடுதலாக செலுத்தினால், எவ்வளவு வருடங்களில் கடன் அடையும்?
👉 எவ்வளவு வட்டி சேமிப்பு கிடைக்கும்?
🔹கடன்: ₹60,00,000
🔹கடன் காலம்: 20 வருடங்கள்
🔹கடன் வட்டி: 8.50%
பார்க்க, பயனுற, பகிர...#வாழ்கபணமுடன் #HomeLoan #HousingLoan #InterestRate… pic.twitter.com/LH8fPVP0Mv
அதேநேரம் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக தலா ரூ.1 லட்சம் செலுத்தினால் 240 மாதங்களுக்கு பதில் 181 மாதங்களில் கடன் அடையும். நீங்கள் செலுத்தும் வட்டி 45 லட்சத்து 33 ஆயிரத்து 965 ரூபாய் ஆக இருக்கும். இதன் மூலம் நீங்கள் 19 லட்சத்து 62 ஆயிரத்து 690 ரூபாய் வட்டி சேமிப்பு கிடைக்கும்.
ஒவ்வொரு வருடமும் தலா 2 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்தினால் 147 மாதங்களில் கடனை அடைக்க முடியும். நீங்கள் 35 லட்சத்து 53 ஆயிரத்து 848 ரூபாய் வட்டி கட்டியிருப்பீர்கள். உங்களுக்கு வட்டி சேமிப்பு 29 லட்சத்து 42 ஆயிரத்து 807 ரூபாய் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் தலா ரூ.5000 கூடுதலாக செலுத்தினால் 199 மாதங்களில் கடன் அடையும். நீங்கள் வட்டியாக 50 லட்சத்து 39 ஆயிரத்து 350 ரூபாய் கட்டியிருப்பீர்கள். உங்கள் வட்டி சேமிப்பு 14 லட்சத்து 57 ஆயிரத்து 305 ரூபாய் ஆக இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் தலா ரூ.10000 கூடுதலாக செலுத்தினால் 169 மாதங்களில் கடன் அடையும். நீங்கள் வட்டியாக 41 லட்சத்து 50 ஆயிரத்து 543 ரூபாய் கட்டியிருப்பீர்கள். உங்கள் வட்டி சேமிப்பு 23 லட்சத்து 46 ஆயிரத்து 112 ரூபாய் ஆக இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் தலா ரூ.10000 மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு லட்சம் செலுத்தினால் 127 மாதங்களில் கடன் அடையும். நீங்கள் வட்டியாக 33 லட்சத்து 13 ஆயிரத்து 217 ரூபாய் கட்டியிருப்பீர்கள். உங்கள் வட்டி சேமிப்பு 31 லட்சத்து 83 ஆயிரத்து 438 ரூபாய் ஆக இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் தலா ரூ.10000 மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை 2 லட்சம் செலுத்தினால் 118 மாதங்களில் கடன் அடையும். நீங்கள் வட்டியாக 27 லட்சத்து 81 ஆயிரத்து 982 ரூபாய் கட்டியிருப்பீர்கள். உங்கள் வட்டி சேமிப்பு 37 லட்சத்து 14 ஆயிரத்து 673 ரூபாய் ஆக இருக்கும். " ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications