Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு லட்சமா? அம்மாடி.. அரசு ஊழியர்களுக்கு கொட்ட போகும் பணம்.. மோடியின் மாஸ்டர்பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.

How much dearness allowance arrear will Union Government employees get?

அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

அதேபோல் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த டிஏ நிலுவை காரணமாக சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரியர்: இந்த உயர்த்தப்பட்ட 42 சதவிகித அகவிலைப்படிக்காக விரைவில் டிஏ நிலுவை தொகை வழங்கப்பட உள்ளது. 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை எவ்வளவு இருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது.

இதை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் உங்கள் அடிப்படை வருமானத்தில் அகவிலைப்படி எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். உங்கள் சம்பளத்தில் DA கணக்கிட, உங்கள் அடிப்படை சம்பளத்தை தற்போதைய) DA விகிதத்தால் பெருக்கி பின்னர் முடிவை 100 ஆல் வகுக்கவும்.

அதாவது உங்கள் அடிப்படை வருமானம் 29200 ரூபாய் என்னும் பட்சத்தில், DA கணக்கீடு பின்வருமாறு செய்ய முடியும்: (42 x 29200) / 100 = 12264. உங்கள் அடிப்படை வருமானம் 29200 ஆக இருந்தால் ( பே மேட்ரிக்ஸ் நிலை 5). நீங்கள் சம்பாதிக்கும் DA தொகை ரூ. 12264.

இந்த டிஏ தொகைக்கு 18 மாத அரியரை கணக்கிட வேண்டும் என்றால், டிஏ தொகையை மாதங்களால் பெருக்க வேண்டும். 18 மாதங்கள் அரியர் என்றால் அதனால் பெருக்க வேண்டும். அதாவது டிஏ தொகை 18 மாத அரியரோடு 220752 ரூபாயாக இருக்கும்.

இந்த தொகைதான் பெரும்பாலும் பேசிக் அரியர் தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு: வருடா வருடம் விலைவாசி உயர்ந்து வருகிறது. விலைவாசிக்கு ஏற்றபடி எப்போதும் சம்பளமும் உயர வேண்டும். தனியாரில் இதற்காக வருடா வருடம் ஹைக் கொடுக்கப்படும். இதுவே அரசு நிறுவனங்களில் செய்தால் அதை அகவிலைப்படி உயர்வு என்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை 4% உயர்த்தி உள்ளது அம்மாநில அரசு. கர்நாடகா மாநிலத்தில் DA விகிதம் 31% இல் இருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+