வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? ஆண்களுக்கு இத்தனை கிராம் மட்டுமே அனுமதியா?
சென்னை: வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் என்ன நடக்கும் உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். அது போல் விற்பனை செய்யும் போது என்ன வரி செலுத்த வேண்டும் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
ஏழை , எளியவர்கள், நடுத்தர மக்கள் என சேமிப்பாக கருதுவது தங்கம்தான். பொன்னிலும் மண்ணிலும் முதலீடு செய்வது என்பது வருங்காலத்திற்கு ஏற்றதாகும். அதனால்தான் அந்த காலத்தில் இருந்தே நல்லது கெட்டதற்கெல்லாம் தங்கத்தை சீராக கொடுத்து வந்தனர்.

தங்கம் விலை உயர்ந்தாலும் இன்னும் உயர்ந்துவிடுமே என்ற பயத்தில் விலை அதிகமாக இருந்தாலும் தங்கத்தை சேர்க்கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு வீடுகளில் பீரோவில் இருந்த 100 சவரன், 200 சவரன், 400 சவரன் என தங்க நகை கொள்ளை போனது என செய்திகளில் வரும் போது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
இத்தனை சவரனை ஏன் வீட்டில் வைக்க வேண்டும். வங்கி லாக்கரில் வைத்திருந்தால் நகை தப்பியிருக்குமே என்பார்கள். அந்த வகையில் வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம், தங்கம் வாங்கும் போதும் விற்பனை செய்யும் போதும் வரி கட்ட வேண்டுமா என்றெல்லாம் கேள்விகள் இருக்கும். அதற்கான பதில்களை பார்க்கலாம்.
தங்க நகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அதில் கட்டுப்பாடுகள் கிடையாது. அதே நேரம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகத் தங்கம் வைத்திருந்தால் அதை எங்கிருந்து வாங்கியுள்ளீர்கள் என்பதை அதிகாரிகள் கேட்டால் விளக்கமளிக்க வேண்டும்.
ஒரு வேளை உங்களின் பரம்பரை சொத்தாக இந்த தங்கம் இருக்கிறது என்றால் அதையும் குறிப்பிட வேண்டும். இந்த விதிமுறைகளின் படி திருமணமான பெண் தனது வீட்டில் 500 கிராம் அதாவது 62.5 சவரன் நகைகளை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண் என்றால் 250 கிராம் அதாவது 32 சவரன் நகை வைத்திருக்கலாம்.
இதே ஆண்கள் என்றால் 100 கிராம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதாவது 12.5 சவரன் ஆகும். இந்த அளவில் யார் தங்கம் வைத்திருந்தாலும் இவை எப்படி வந்தது, எப்போது வாங்கியது என்றெல்லாம் விளக்கத் தேவையில்லை. இந்த அளவுக்கு மேல் தங்கம் வாங்கினால் மட்டுமே விளக்க வேண்டியிருக்கும். இந்த அளவுகள் உள்ள தங்கத்திற்கு வரிகளும் இல்லை.
தங்கத்தை விற்றால் வரி செலுத்த வேண்டும். தங்கத்தை 3 ஆண்டுகள் வைத்திருந்த பிறகு விற்கும் போது அதில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் வாங்கிய 3 ஆண்டுகளுக்குள் விற்றால், உங்களது வருமான வரி ஸ்லாப்பிற்கேற்ப வரி செலுத்த வேண்டும்.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications