உங்களின் மாத சம்பளம் எவ்வளவு.. எவ்வளவு வீட்டுக்கடன் கிடைக்கும்.. இஎம்ஐ எப்படி?
சென்னை: சென்னை, கோவை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்பட பெருநகரங்கங்களில் மாத சம்பளம் வாங்கும் பலரின் கனவு சொந்தவீடு கட்டுவது தான். தனி வீடு அல்லது அடுக்குமாடி வீடு என ஏதாவது ஒரு குடியிருப்பை வாங்க விரும்புகிறார்கள். அதற்கு நிறைய பேர் வீட்டுக்கடன் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள். அப்படி வீட்டுக்கடன் வாங்க போகிறவர்கள் இதை பாருங்கள். ஏனெனில் உங்களின் மாத சம்பளம் எவ்வளவு, அதற்கு எவ்வளவு வீட்டுக்கடன் கிடைக்கும்? அதற்கு 20 ஆண்டுக்கான இஎம்ஐ மற்றும் வட்டி விகிதம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைக்கு வீட்டுக் கடன் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நீண்ட காலம் தவணை தொகை செலுத்த வேண்டும் என்பதால், வேலை நிச்சயமின்மை, வருமான நிச்சயமின்மை போன்ற சிக்கல்களை கவனித்தில் கொள்வது நல்லது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதேநேரம் வீட்டுக் கடன் பெற்றவர்கள், தவணைக் காலம் முடியும் முன்பே எவ்வளவு விரைவாக செலுத்த முடியுமோ அந்த அளவிற்கு விரைவாக செலுத்த வேண்டும் என்றும் அப்படி செலுத்துவதை கடன் வாங்கிய முதல் ஆண்டிலேயே தொடங்கினால் அதிக வட்டி தொகையை சேமிக்க முடியும் என்றும், கடன் தவணை விரைவாக முடியும் என்றும் கூறுகிறார்கள்.

வீட்டுக்கடன் யாருக்கு சிறந்தது
அதாவது ஒருவர் 25 ஆண்டுகளுக்கு வாங்கிய கடனை விரைவாக அடைக்க வேண்டும் என்றால். ஒவ்வோர் ஆண்டும் தவணைத் தொகையை 10% அதிகரித்தால் முழுக் கடனையும் 25 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகள் 2 மாதங்களில் கட்டி முடித்துவிட முடியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேபோல் பராமரிப்புச் செலவு மறைமுகச் செலவுகள் மிக அதிகம் என்பதால், 35 முதல் 40 வயதில் இருப்பவர்கள் நீண்டகால வீட்டுக் கடன் பெற விரும்பினால், குறைவான கால கடன் தான் சிறந்தது என்கிறார்கள்.
கடன் விகிதம்
சரி விஷயத்திற்கு வருவோம். எல்லாருக்குமே வீட்டுக்கடன் வாங்க ஆசை இருக்கும். உங்களின் மாத சம்பளம் எவ்வளவு, அதற்கு எவ்வளவு வீட்டுக்கடன் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம். எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட முக்கியமான நிதி நிறுவனங்களில் வீட்டுக்கடன் வட்டி 8 முதல் 8.540 சதவீதம் வரை வீட்டுக்கடனுக்கு வட்டி உள்ளது. 8.5 சதவீத வட்டியில் கடன் வாங்க விரும்பினால், எவ்வளவு வீட்டுக்கடன் எந்த வயதினருக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்'
20000 சம்பளம்
10000 சம்பளம் வாங்குவோருக்கு அதிகபட்சமாக 6 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 5200ஆக இருக்கும். அதேபோல் 20000 சம்பளம் வாங்குவோருக்கு அதிகபட்சமாக 12 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 10400 ஆக இருக்கும்.
மாத சம்பளம் 30000
உங்கள் மாத சம்பளம் 30000 என்றால், அதிகபட்சமாக 18 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 15,600 ஆக இருக்கும். உங்கள் மாத சம்பளம் 40,000 என்றால், அதிகபட்சமாக 24 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 20,800 ஆக இருக்கும்.
மாத சம்பளம் 50000
இதேபோல் உங்கள் மாத சம்பளம் 50,000 என்றால், அதிகபட்சமாக 30 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 26,000 ஆக இருக்கும். உங்கள் மாத சம்பளம் 60,000 என்றால், அதிகபட்சமாக 36 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 31,200 ஆக இருக்கும்.

70000 என்றால் வீட்டுக்கடன் எவ்வளவு
ஒருவேளை உங்கள் மாத சம்பளம் 70,000 என்றால், அதிகபட்சமாக 42 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 36,400 ஆக இருக்கும். உங்கள் மாத சம்பளம் 80,000 என்றால், அதிகபட்சமாக 48 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 41,600 ஆக இருக்கும்.
ஒரு லட்சம் வாங்குவோருக்கு எவ்வளவு கடன்
உங்கள் மாத சம்பளம் 90,000 என்றால், அதிகபட்சமாக 54 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 46,800 ஆக இருக்கும். உங்கள் மாத சம்பளம் ஒரு லட்சம் என்றால், அதிகபட்சமாக 60 லட்சம் வரை வீட்டுக்கடன் கிடைக்கும். அதற்கு வட்டி விகிதம் 8.50 சதவீதம் என்றால், 20 வருடங்களுக்கு மாத இஎம்ஐ 52,000 ஆக இருக்கும்.
கடன் தகுதி எப்படி தீர்மானிக்கப்படுகிறது
அதேநேரம் உங்களின் கடன் தகுதி என்பது உங்கள் மாத வருமானம் மட்டுமின்றி ஏற்கனவே நீங்கள் வாங்கிவைத்துள்ள கடன் மற்றும் கடனுக்கான இஎம்ஐயும் தீர்மானிக்கும். உங்களுக்கு எந்த கடனும் இல்லை என்றால் தான் இந்த அளவிற்கு அதிகபட்ச வீட்டுக்கடன் கிடைக்கும். அதேநேரம் உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் என்பது, உங்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் இருக்கும். ஒருவேளை சிபில் நன்றாக இருந்தால் 8 சதவீதத்தில் கூட கடன் கிடைக்கும். ஏன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் 7.5 சதவீதத்தில் கூட எதிர்காலத்தில் வீட்டுக்கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications