அசத்தல்.. அரசு ஊழியர்களுக்கு உயரபோகுது சம்பளம்.. அடேங்கப்பா இத்தனை லட்சமா.. வெளியாகும் ஹேப்பி நியூஸ்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஜாக்பாட் வரப்போவதாக, தெரிகிறது.. அதன்படி மத்திய அரசின் ஊழியர்கள் நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வை விரைவில் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு, அது 2016ல் அமலுக்கு வந்தது. அந்தவகையில், எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

பரிந்துரை: தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெற்றுவருகிறார்கள்... ஆனாலும், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் சொல்லி வருகிறார்கள்.. எனவேதான், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுவிட்டால், புதிய ஆணையம் பலவேறு மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் வரும் 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியர்கள்: இதனிடையே, 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரப்போவதாக மீண்டும் ஒருமுறை தகவல் வெளியாகி உள்ளது.. வழக்கமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது.. இந்த புள்ளிகள், ஏறுமுகமாக இருந்தால், அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும்.. இந்த புள்ளிகள் தற்போதுதான் வேகமாக உயர தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக, கடந்த ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் வரை அதிகரித்து, இப்போது 134.2 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாதத்திற்கான புள்ளிகள் இனி வரஉள்ள நிலையில், அதனை கணக்கில் கொண்டே, அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..
அந்தவகையில், பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்திவருவதால், பணவீக்கம் அதிகமாகும் போது அகவிலைப்படியும் அதிகரிக்கப்படும்.
அகவிலைப்படி: கடந்த ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 46% ஆக உயரும். இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவிகிதமாக உள்ளது. அதேபோல, வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு கணக்கீடு செய்யப்பட்டு இறுதி முடிவு வெளியாகும் என்று ஊதிய குழு வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி வருகிறது..
எனவே, 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதங்கள் உயர்த்தப்பட்டு 46 சதவீத வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கூடிவருகிறது.. அகவிலைப்படி உயர்ந்தால், அவர்களுக்கான அடிப்படை சம்பளமும் உயர்த்தப்படும்.
சம்பள உயர்வு: தற்போது அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில், இதில் அவருக்கு 42 சதவீதம் அகவிலைப்படியாக, அதாவது ரூ.7560 கிடைக்கிறது. ஒருவேளை அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்தால், அகவிலைப்படி மாதம் ரூ.8280 ஆக இருக்கும். அதன்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.720 அதிகரிக்கும்.. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications