Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக வங்கி கணக்கில் பிக்சட் டெபாசிட் இத்தனை கோடியா? பொதுக்குழுவில் தாக்கல் செய்த விஜயபாஸ்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், செயற்குழு பொதுக்குழு அவைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுகவின் வரவு செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்தார். அதன் முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், செயற்குழு பொதுக்குழு அவைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிமுக வங்கிக் கணக்கில் பிக்சட் டெப்பாசி எவ்வளவு என்ற கணக்கு விவரங்களை விஜயபாஸ்கர் கூறினார்.

aiadmk general committee edappadi palaniswami

விஜயபாஸ்கர் பேசியதாவது:- எம்ஜிஆர், ஜெயலலிதாவை வணங்கி, மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என்ற எம்ஜிஆரின் பாட்டுக்கு இணங்க, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற வழியில் நடந்தால் ஊர்வலம், நின்றால் மாநாடு என்று சொல்லுகிற அளவுக்கு இந்த பொதுக்குழு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

அதிமுகவின் வரவு செலவு கணக்கு விவரங்களை இப்போது கூறுகிறேன். 26.12.2023 முதல் 14.12.2024 ஆம் தேதி நிலவரப்படி, கழகத்தின் சார்பில் போடப்பட்டுள்ள நிலை வைப்புகள் பிக்சட் டெப்பாசிட்,

* கழக நிதி நிலை வைப்பு பிக்சட் டெப்பாசிட் - 160 கோடி ரூபாய்
* கழக வளர்ச்சி நிதி நிலை வைப்பு பிக்சட் டெப்பாசிட் - 107 கோடியே 50 லட்சம் ரூபாய்
ஆக மொத்தம் பிக்சட் டெப்பாசிட் 267.50 கோடி ரூபாய்

* கழக நடப்பு கணக்குகளில் தற்போதைய வங்கி இருப்புகள்:
கரூர் வைசியா வங்கி - 1,60,51,226 ரூபாய்
இந்தியன் வங்கி - 10,874 ரூபாய்
பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) - 5,10,401 ரூபாய்

* கழக வளர்ச்சி நிதி நடப்பு கணக்கில் தற்போதைய வங்கி இருப்புகள்:
கரூர் வைசியா வங்கி (கரண்ட் அக்கவுண்ட்) - 32,32,52,218 ரூபாய்
பேங்க் ஆப் இந்தியா 1,09,075 ரூபாய்
* கழக கட்டிட நிதி கணக்கில் தற்போதைய வங்கி இருப்பு - 2,37,965 ரூபாய்.
என மொத்தம் கரண்ட் அக்கவுண்ட் 34,06,26,162

வரவுகள் விவரம்:

* கழக நிலை வைப்புகள் மூலம் வட்டி வரவு - 11,70,77,381 ரூபாய்
* கழக வளர்ச்சி நிதி நிலை வைப்புகள் மூலம் வட்டி வரவு - 7,70,23,028 ரூபாய்
* கழக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வழங்கிய வகையில் வரவு -1,79,020 ரூபாய்.
* உறுப்பினர்கள் உரிமை சீட்டுக்கள் புதுப்பித்தல் வகையில் வரவு 9,77,150 ரூபாய்.

* 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெறப்பட்ட விருப்ப மனு கட்டணங்கள் மூலம் வரவு 4,81,75,000 ரூபாய்
* பெறப்பட்ட கழக வளர்ச்சி நிதி - 36,65,19,500 ரூபாய்

செலவு விவரம்:

* கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவுக்கான செலவு - 77,30,167 ரூபாய்
* கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு வழங்கப்பட்ட நிதி - 1 கோடி ரூபாய்
* பெஞ்சல் புயல் மற்றும் சாலை விபத்தில் அகாள மரணமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப நல நிதி - 10 லட்சம் ரூபாய்
* கழக குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவி - 2,50,000 ரூபாய்

* கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், சைக்கிள் பிரசாரம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய வகையில் - 38,25,000 ரூபாய்
* நடிகை அம்முக்குட்டி பிஏ புஷ்பமாலாவிற்கும், கள்ளக்குறிச்சி விஷ சாராயா சம்பவத்தால் தாய் தந்தையை இழந்த 2 மாணவர்களுக்கு மாதம் மாதம் தொடர்ந்து தலா 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வரும் வகையில் - 1,10,000 ரூபாய்

* 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட செலவுகள் - 23,54,12,785 ரூபாய்
* ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு நிகழ்ச்சிக்கான செலவு - 69,45,529 ரூபாய்
* உறுப்பினர் ரசிது புத்தகங்கள், தீர்மான புத்தகங்கள் அச்சிட்டது வகையில் 5,48,08,450 ரூபாய். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+