தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வென்று 2010ல் வருவாய் ஆய்வாளராக ஆக வேலைக்கு சேர்ந்தவர் 16 வருடத்தில் என்ன வேலை செய்வார்.. 2026 நிலவரப்படி எவ்வளவு இருக்கும் .. முதலில் மக்கள் அறிய வேண்டிய ஒரு உண்மை.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேரடி வருவாய் ஆய்வாளர் பணியிடத்தை குரூப்2 ஏ (நேர்முகத் தேர்வு இல்லை) தேர்வின் மூலமே நிரப்புகிறது. 2010ம் ஆண்டில் பணிக்கு சேர்ந்தவர் தற்போது ₹90,400 - ₹1,08,300 சம்பளம் வாங்கும் வாய்ப்பு அதிகம்.. கைக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மூலம் இளநிலை உதவியாளராகச் சேர்ந்து 7-10 ஆண்டுகளில் வருவாய் ஆய்வளாராக பலர் பதவி உயர்வு பெற்றார்கள். ஆனால் பட்டதாரிகள் நேரடியாக குரூப் 2-ஏ தேர்வு எழுதி வருவாய் ஆய்வாளராக முடியும். 2010-இல் வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்த ஒருவரின் 16 ஆண்டுகாலப் பணிப் பயணம் மற்றும் 2026-ஆம் ஆண்டு நிலவரப்படியான அவரது அதிகாரப் படிநிலை மற்றும் ஊதியம் பற்றி பார்ப்போம்.

How much salary will a person who joined as an RI in Tamil Nadu in 2010 be earning in 2026

தமிழ்நாடு வருவாய்த் துறையின் பதவி உயர்வு விதிகளின்படி, 16 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவர் 2026-இல் துணை வட்டாட்சியர் ஆக இருக்க வாய்ப்பு அதிகம் ஆகும். பொதுவாக 7 முதல் 10 ஆண்டுகளில் RI-யிலிருந்து துணை வட்டாட்சியராகப் பதவி உயர்வு கிடைக்கும். எனவே, 2026-இல் அவர் ஒரு மூத்த துணை வட்டாட்சியராக மாறி இருப்பார்.

சில மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருந்தால், 15 அல்லது 16-வது ஆண்டில் அவர் வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்றிருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. அவர் ஒரு வட்டாட்சியராக அல்லது துணை வட்டாட்சியராக 2026-இல் முக்கிய அதிகாரத்துடன் அமர்ந்திருப்பார். அவர் சான்றிதழ் வாரிசுச் சான்றிதழ் , சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்றவற்றிற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவராக இருப்பார்.

நில நிர்வாகத்தை பொறுத்தவரை பட்டா மாறுதல் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் நில அளவை பணிகளைக் கண்காணிப்பவராக இருப்பார். அதேபோல் வட்டார அளவில் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால், நிர்வாக நடுவராகச் செயல்பட்டு அமைதியை நிலைநாட்ட போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்.

அதேபோல் தேர்தல் காலங்களில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், புயல்/வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புப் பணிகளின் பொறுப்பாளராகவும் இருப்பார். இவரது சம்பளம் எவ்வளவு இருக்கும்? 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழக அரசின் 7-வது ஊதியக் குழு மற்றும் தற்போதைய அகவிலைப்படி உயர்வின் அடிப்படையில் ஒரு தோராயமான கணக்கீட்டினை பார்ப்போம்

2010ல் சேர்ந்தவர் வட்டாட்சியர் நிலையில் இருந்தால் அடிப்படை ஊதியம் ₹62,000 - ₹68,000 ஆக இருக்கும். அகவிலைப்படி ( ₹34,000 - ₹38,000) ஆக இருக்கும். வீட்டு வாடகைப்படி ₹5,000 - ₹10,000 (நகரத்தைப் பொறுத்து)ஆக இருக்கும். இதரப்படி 1000 என மொத்த ஊதியம் ₹1,02,000 - ₹1,17,000 இருக்கும்.

அவருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் , வருமான வரி மற்றும் இதரப் பிடித்தங்கள் போக, அவருக்குச் சுமார் சுமார் ₹92,000 முதல் ₹1,05,000 வரை இருக்கும். வரை மாதச் சம்பளம் கைக்கு வரும். 16 ஆண்டுகள் பணி முடித்திருப்பதால், அவர் இன்னும் 4 முதல் 5 ஆண்டுகளில் வருவாய் கோட்டாட்சியர் (RDO / Deputy Collector) பதவி உயர்வுப் பட்டியலுக்குத் தகுதியுடையவர் ஆவார். 2010-இல் சேர்ந்தவருக்குத் தற்போது சுமார் 40-45 வயது இருக்கும் என்பதால், அவர் பணி ஓய்வு பெறும்போது மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) என்ற உயரிய நிலையை அடைய அதிக வாய்ப்பு உள்ளது. 2030ல் கோட்டாட்சியராக மாறியிருந்தால் வருமான வரி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) மற்றும் இதர பிடித்தங்கள் போக, சுமார் ₹1,20,000 முதல் ₹1,40,000 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+