மாத ஊதியம் ரூ.1 லட்சம் வரை வாங்குவோர் இனி வரியே செலுத்த வேண்டியிருக்காதா? வருமான வரி சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதை பின்வரும் வகையில் புரிந்து கொள்ளலாம்.

இந்த சலுகை முதலில் எல்லோருக்கும் கிடையாது. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.

budget 2025 budget nirmala sitharaman 2025 2025

0-4 லட்சம் ரூபாய் வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய் 5 சதவீதம்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம்
12-16 லட்சம் ரூபாய் 15 சதவீதம்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம்
20-24 லட்சம் ரூபாய் 25 சதவீதம்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்

எடுத்துக்காட்டு:

புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. நீங்கள் இந்த முறையை தேர்வு செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் மாத வருமானம் ரூ. 1 லட்சம் என்றால்.. வருட வருமானம் 12 லட்சம்.

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.

அதுவே நீங்கள் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது பின்வரும் ஸ்லாப் நடைமுறை ஆகும்.

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

Income Tax Rate
Rs 0-4 lakh Nil
Rs 4-8 lakh 5%
Rs 8-12 lakh 10%
Rs 12-16 lakh 15%
Rs 16-20 lakh 20%
Rs 20-24 lakh 25%
Above Rs 24 lakh 30%

புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்

பழைய வரி விதிப்பு முறை. அது நீங்கள் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்து இருந்தால்.. அதில் மாற்றம் எதுவும் இன்று செய்யப்படவில்லை. நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+