குறையுது ஜிஎஸ்டி.. இனி ரூ.15 லட்சத்திற்கு கார் வாங்கினால்.. எவ்வளவு GST கட்ட வேண்டும்? எளிய கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு முன்பாக இந்தியாவில் ஆட்டோமொபைல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் நீண்டகாலக் கோரிக்கையான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அனைத்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 28% ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் வருகின்றன. இதனால், வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதுடன், சந்தை வளர்ச்சியும் சவால் நிறைந்ததாக இருக்கிறது.

gst

தற்போது, அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இத்துடன், எஞ்சின் கொள்ளளவு, நீளம், மற்றும் வாகன வகையைப் பொறுத்து 1% முதல் 22% வரை இழப்பீட்டு செஸ் (compensation cess) வரி விதிக்கப்படுவதால், மொத்த வரி 50% வரை அதிகரிக்கிறது. இருப்பினும், மின்சார வாகனங்களுக்கு மட்டும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதுடன், இழப்பீட்டு செஸ் இல்லை.

வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி

இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டாலும், 350சிசி வரை எஞ்சின் கொள்ளளவு கொண்ட மாடல்களுக்கு இழப்பீட்டு செஸ் இல்லை. 350சிசி-க்கு மேல் உள்ள மாடல்களுக்கு 3% இழப்பீட்டு செஸ் வரி உண்டு.

ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் குழுக்கள் (GoMs) இந்த வாரம் கூடி, மத்திய அரசின் வரி அமைப்பு திட்டத்தை மறுஆய்வு செய்யும். இந்தக் குழுக்களின் பரிந்துரைகள் பின்னர் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்படும்.

திருத்தப்பட்ட வரி கட்டமைப்பில், 5% மற்றும் 18% வரிகள் தக்கவைக்கப்பட்டு, 12% மற்றும் 28% வரிகள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது பெரிய அளவில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்குப் பயனளிக்கும். எனினும், ஆடம்பர கார்கள் போன்ற சில பொருட்கள் (sin goods) 40% வரிக்கு உட்படுத்தப்படலாம்.

ஜிஎஸ்டி கணக்கு: இனி ரூ.15 லட்சத்திற்கு கார் வாங்கினால்.. எவ்வளவு GST கட்ட வேண்டும்?

ஜிஎஸ்டி @ 29%

ஜிஎஸ்டி தொகை = 15,00,000 × 29%
= 15,00,000 × 0.29
= ₹4,35,000

காரின் மொத்த விலை = 15,00,000 + 4,35,000
= ₹19,35,000

அதுவே ஜிஎஸ்டி @ 18%க்கு

ஜிஎஸ்டி தொகை = 15,00,000 × 18%
= 15,00,000 × 0.18
= ₹2,70,000

காரின் மொத்த விலை = 15,00,000 + 2,70,000
= ₹17,70,000

எனவே 29% ஜிஎஸ்டியுடன் நீங்கள் ₹19.35 லட்சம் செலுத்துகிறீர்கள். ஆனால் 18% ஜிஎஸ்டியுடன் நீங்கள் ₹17.70 லட்சம் செலுத்துகிறீர்கள். வித்தியாசம் ஜிஎஸ்டி குறைந்தால் (சேமிப்பு): ₹1.65 லட்சம் ஆகும்.

ஜிஎஸ்டி தொடர்பான மாற்றங்கள் குறித்து இதுவரை வெளிவந்த தகவல்கள்

மத்திய அரசு தற்போதுள்ள 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி விகிதங்களை மட்டுமே வைத்திருக்க முன்மொழிந்துள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 28% வரி வரம்பில் உள்ள 90% பொருட்களுக்கான வரியை 18% ஆகக் குறைக்கவும் அரசு எதிர்பார்க்கிறது. அதேபோல, 12% அடுக்கில் உள்ள பொருட்கள் 5% அடுக்கிற்கு மாற்றப்படவும் முன்மொழியப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+