Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சில முக்கியமான தொகுதிகளில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எம்பி சீட்டுகளை பெறவில்லை என்றாலும் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சிகளை நாம் தமிழரே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் சென்னை பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

How Naam Tamilar party will play a major role in Tamil Nadu Lok Sabha election

மொத்தம் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் பல முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1. திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்,

2. வடசென்னை - டாக்டர் அமுதினி

3. தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4. மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்

5. திருப்பெரும்புதூர் - டாக்டர் வெ.ரவிச்சந்திரன்

6. காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்

7. அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8. வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்

9. தருமபுரி - டாக்டர் கா.அபிநயா

10. திருவண்ணாமலை - டாக்டர் ரா.ரமேஷ்பாபு

11. ஆரணி - டாக்டர் கு.பாக்கியலட்சுமி

12. விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்

13. கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14. சேலம் - டாக்டர் க. மனோஜ்குமார்

15. நாமக்கல் - க.கனிமொழி

16. ஈரோடு - டாக்டர் மு.கார்மேகன்

17. திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி

18. நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்

19. கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி - டாக்டர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் - டாக்டர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - டாக்டர்ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - டாக்டர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி - டாக்டர் ரா.மேனகா என மொத்தம் 40 பேர் போட்டியிட உள்ளனர்.

10 தொகுதிகள்: 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சில முக்கியமான தொகுதிகளில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எம்பி சீட்டுகளை பெறவில்லை என்றாலும் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சிகளை நாம் தமிழரே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

தருமபுரி - டாக்டர் கா.அபிநயா

கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி

நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்

கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

இந்த 10 தொகுதிகளில் ஏற்கனவே திமுக - பாஜக - அதிமுக இடையே கடுமையான போட்டிகள் உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கும் சில இடங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இதனால் சில இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் கட்சியாகவும், சில இடங்களில் இரண்டாம் இடங்களை தீர்மானிக்கும் கட்சியாகவும் நாம் தமிழர் இருக்க போகிறது.

2019 தேர்தல்: திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.

நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ள்ளது.

சாதகமான விஷயங்கள்;

அதிமுகவிற்கு சென்ற வாக்குகள் கட்சி பிளவால் கொஞ்சம் நாம் தமிழர் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி இல்லாததால் எதிர்க்கட்சி வாக்குகளை நாம் தமிழர் பிரிக்கும்

திமுக மீது நேரடி அட்டாக் காரணமாக திமுக அதிருப்தி வாக்குகள் சில நாம் தமிழருக்கு செல்லும்

சிறுபான்மையினர், தலித் மக்கள் சிலர் திமுகவிற்கு மாற்றாக நாம் தமிழரை கருதுவது சாதகமாக அமையும்.

பாதகமான விஷயம்:

கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தது.

சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அவ்வளவு பிரபலம் இல்லை.

தமிழ்கூட தெரியாத வெளிநாட்டில் வளர்ந்த வேட்பாளர்கள் பிரச்சனை.

புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் சிக்கல்.

கட்சிக்கு கறைப்பட கூடிய சில ஆடியோக்கள் சமீபத்தில் வெளியானது சிக்கலாக மாறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+