உஷாரய்யா உஷாரு.. “பிக் பில்லியன், கிரேட் இந்தியன்”.. மிளகாய் அறைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்
சென்னை: பண்டிகால விற்பனை என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் எப்படியெல்லாம் மக்கள் மனதை மாற்றி தேவையற்ற செலவை செய்ய வைக்கின்றன என விரிவாக விளக்கி இருக்கிறார் பொருளாதார ஆலோசகர் ராஜேஸ்.
"உஷாரய்யா உஷாரு, பண்டிகை கால விற்பனை உஷாரு... இதுலெல்லாம் ஓடிப் பிடிச்சி பொருட்கள் வாங்குவதற்கு முன்னால், மனோதத்துவ ரீதியாக நீங்கள் எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்யப் படுகிறீர்கள் என்பதை பின்வரும் பெயர்களை கூகுள் செய்து படித்து தெரிந்துகொண்டு அதிக செலவு செய்யாமல் தவிருங்கள்.

1. பேண்ட்வேகன் எபெக்ட் (BANDWAGON EFFECT)
அல்லது Herd Mentality - எல்லோரும் வாங்குகிறார்கள். அதனால் நானும் எதாவது வாங்கியே ஆகவேண்டுமென்கிற உந்துதல். இந்த உந்துதல்கள் அனைத்தும், இடைவிடாது உங்களுக்கு காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் உருவாக்கப் படுகிறது.
2. ஆங்கரின் பயஸ் (ANCHORING BIAS)
ஏதாவது ஒரு பொருள் வாங்க எத்தனிக்கையில், அதைக் குறித்த தகவல்களை தேடும்போது, நீங்கள் காணும் முதல் தகவலை சரியென எடுத்துக் கொள்வது. இந்த உந்துதல், SEO மற்றும் search ranking மூலமாக உருவாக்கப் படுகிறது.
3. கன்ஃபர்மேஷன் பயஸ் (CONFIRMATION BIAS)
நீங்கள் ஒரு பொருளை வாங்கவேண்டுமென்பதை முடிவெடுத்துவிட்டு, அதற்காக விமர்சனங்கள் பார்க்கையில், அனைத்து விமர்சனங்களுமே, உங்களது முடிவை பிரதிபலிப்பதாக நம்புவது. டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் மூலமாக உங்களை, உங்களுக்கு தேவையில்லாத பொருளை வாங்க வைப்பதற்கான உத்தி இது.
உதாரணமாக, ஒரு பொருள் 25% தள்ளுபடியில் கிடைக்கிறதென்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு உண்மையான தேவை இருந்து நீங்கள் அந்த பொருளை வாங்கினால், அது உங்களுக்கு 25% டிஸ்கவுண்ட். உங்களுக்கு தேவை இல்லாமல் இருந்து, டிஸ்கவுண்ட் தருகிறார்களே என்று நீங்கள் அந்த பொருளை வாங்கினால், அது உங்களுக்கு 25% செலவு.
4. ஸ்கேர்சிட்டி பயஸ் (SCARCITY BIAS)
அரிதான பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்கிற நம்பிக்கையை விதைப்பது. "போனா வராது, பொழுது போனா கிடைக்காது" என்பதன் லேட்டஸ்ட் வெர்சன் தான் இது. ஒரு பொருளை விற்பதற்கு, "குறைந்த அளவே ஸ்டாக் உள்ளது" / "Limited Stocks Only" / "Only x numbers of stock available" என்று கூறி, பொருட்களை உங்கள் தலையில் கட்டும் உத்தியே இது.
5. SUNK COST FALLACY
எதோ ஒரு பொருளை நீங்கள் தேடித் தேடி அலைந்த பின்னர், அதில் இவ்வளவு நேரம் செலவிட்டு விட்டோமே, அதற்காக வாங்கிவிடலாம் என்கிற முடிவை நீங்கள் எடுப்பது தான் இது. பெரும்பாலும், ஷாப்பிங் மால்களில் நீங்கள் நடந்து நடந்து திரெட் ஆகி, "இவ்வளவு நேரம் நடந்துட்டோம், ஏதாவது வாங்கிவிட்டுப் போவோம்" என்கிற உந்துதல் தான் இது.
6. RESTRAINT BIAS
"நான் முடிவு செய்த பொருட்களை மட்டும் தான் வாங்குவேன். வேறு எதையும் வாங்கமாட்டேன்" என்கிற உறுதியோடு ஷாப்பிங் தொடங்கி, உங்களுக்கு கண் முன்னர் காண்பிக்கப்படும் தள்ளுபடிகளை கண்டு மயங்கி, லிஸ்ட்டில் இருப்பதை விட அதிகமாக பொருட்களை வாங்கிச் செல்வது. பெரும்பாலும், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்க்குச் சென்றால், தேவையில்லாத பொருட்களை உங்களை வாங்கவைக்கும் உத்தி தான் இது.
இந்த பண்டிகை காலங்களில், உங்கள் பணத்தை அவர்களுக்காக செலவு செய்ய வைக்க ஏகப்பட்ட நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. மேலே சொன்ன "Cognitive biases" களை சரியான நேரத்தில் கண்டுணர்ந்து, அவை உங்களை பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சேமித்த பணமே சம்பாதித்த பணம். சேமியுங்கள். முதலீடு செய்யுங்கள். செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழுங்கள். வாழ்க பணமுடன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications