மொபைலுக்கு அடிமையாகும் குழந்தைகள்.. கட்டுப்படுத்துவது எப்படி? பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: 0 முதல் 2 வயதான குழந்தைகளுக்கு மொபல் ஸ்க்ரீனை காட்ட கூடாது என்று குழந்தைகள் நல மருத்துவர் மணிமேகலை தெரிவித்துள்ளார். அதன்பின் 2 முதல் 5 வயதாகும் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் வரை மட்டுமே மொபைல் காட்டலாம் என்றும், 5 வயதிற்கு மேல் 2 மணி நேரம் வரை அதிகபட்சமாக மொபைலில் வீடியோ பார்க்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே செல்ஃபோனை உடைத்ததால் ஏற்பட்ட சண்டையில் கிணற்றில் குதித்த தங்கையும், அவரை காப்பாற்ற குதித்த அண்ணனும் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோஷியல் மீடியா யுகத்தில் குழந்தைகளின் கைகளில் செல்ஃபோனை கொடுக்கும் பழக்கம் பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் செல்ஃபோன் பயன்பாட்டுக்கு குழந்தைகள் அடிமையாகிவிடுகின்றனர்.

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் மணிமேகலை பேசுகையில், மொபைல் பயன்பாட்டால் எழுந்த கோபம் காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர். இதன் மூலம் எந்த அளவிற்கு மொபைல் குழந்தைகளை பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். நம் வாழ்க்கையில் இருந்து மொபைலை பிரிக்க முடியவில்லை. பிறந்து சில மாதங்களேயான குழந்தைகள் கூட மொபைலில் வீடியோ பார்க்கிறார்கள்.
இதற்கு நாம்தான் காரணம். மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறோம். அதேபோல் மொபைலை காட்டினால் நன்றாக சாப்பிடுகிறார்கள் என்று அதனை பின்பற்றிவிடுகிறோம். ஆனால் மொபைலை பார்க்க தொடங்கிய பின், மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற தோன்றும் வகையில்தான் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீடியோ, கார்ட்டூன் உள்ளிட்டவை அதிகமாக பார்க்கும் போது, மொபைலில் தானாக வந்துவிடும். அதேபோல் குழந்தைகள் ஒரு வீடியோ பார்த்தால், நிச்சயமாக ஒரு வீடியோவுடன் நிறுத்த மாட்டார்கள். ஒரு வீடியோவை பார்க்கும் மகிழ்ச்சியால் நமது மூளையில் dopamine சுரக்கும். அதனால் அந்த மகிழ்ச்சி குறையும் போது, அடுத்த வீடியோவை பார்க்க தோன்றும். இது கிட்டத்தட்ட அடிக்ஷனாக மாறிவிடும்.
இதனை பெற்றோர் உணர்ந்து குழந்தையை மீட்டெடுக்க நினைக்கும் போது, சிக்கலான சூழல் உருவாகிவிடுகிறது. அதனால் முடிந்த அளவிற்கு குழந்தைகள் கைகளில் மொபைல் கொடுக்காமல் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 2 வயது வரை மொபைல் ஸ்க்ரீன் காட்டவே தேவையில்லை. அதிகபட்சமாக வீடியோ கால் பேசலாம்.
அதன்பின் 2 முதல் 5 வயது வரை ஒரு நாளில் ஒரு மணி நேரம் வரை மட்டுமே மொபைல் ஸ்க்ரீன் காட்டலாம். அதனையும் 15 நிமிடங்களாக பிரித்து காட்ட வேண்டும். 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் 2 மணி நேரத்திற்கு மேல் மொபைல் ஸ்க்ரீன் காட்டக் கூடாது. தொடக்கம் முதலே ஒழுக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். குழந்தைகளுக்கு அதிகளவில் விளையாட்டுகளை விளையாட வைக்க வேண்டும்.
மொபைல் பார்க்க கூடாது என்று சொல்வதை விடவும், அவர்களுக்கு மாற்றாக ஒரு விஷயத்தை கொடுத்தால் சிறப்பு. அதேபோல் குழந்தைகளுக்கு மொபைல் ஸ்க்ரீன் காட்டும் போது, ஒரு மணி நேரம் முடிவடைந்த பின் உடனடியாக ஆஃபாகும் வகையில் செட்டிங்ஸ் அமைத்து கொள்ள வேண்டும். அதேபோல் குழந்தைகள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் செயலி மூலம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
ஒருவேளை மொபைல் பார்க்கும் நேரத்தை விடவும் கூடுதல் நேரம் பார்த்தால், உடனடியாக சில நாட்களுக்கு மொபைல் கிடையாது என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும். எந்த வகையில் மொபைல் விஷயத்தில் மட்டும் குழந்தைகளுக்கு தளர்வுகள் அளிக்க கூடாது. அதேபோல் குழந்தைகள் உடலை பயன்படுத்தி விளையாடி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெற்றோரும் வீடியோக்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications